சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்! மெட்ரோ நிறுவனம் கொடுத்த சூப்பர் ஆஃபர்! பட் ஒன் கண்டிஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்றும் நாளையும் என இரு நாட்களுக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது. இதை பார்க்க செல்லும் மக்கள் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

தெற்காசியா மற்றும் இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் இன்று தொடங்கி நாளை வரை இரு நாட்களுக்கு நடைபெறுகிறது.

formula 4 race formula 4 race chennai chennai 4

இந்த போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தவுள்ளது. பல்வேறு தடைகளை தாண்டி தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த போட்டியை சென்னைக்கு கொண்டு வந்துள்ளார்.

இந்த போட்டியானது சென்னை தீவுத்திடலில் தொடங்கி பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை வழியாக மீண்டும் தீவுத்திடல் வரை நடக்கும். கொடி மர சாலை, அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் என 3 கி.மீ. தீவுத்திடலை சுற்றியுள்ள இடங்களை இணைத்து 3.5 கிலோ மீட்டர் சர்க்யூட்டில் போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போட்டியை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் சென்னை இரவு நேர ஃபார்மலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை காண செல்வோர் மெட்ரோவில் இலவசமாக செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு விளையாட்ட மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றுமு் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் வரும் ஆகஸ்ட் 31 இன்று) மற்றும் செப்டம்பர் 1 (நாளை) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது. இந்நிகழ்விற்கு செல்லும் பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட்டுடன் இணைந்து ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக மெட்ரோ அல்லது பயணச்சீட்டுகளை பயணிகளுக்கு வழங்குகிறது.

Paytm Insider' மூலம் முன்பதிவு செய்யப்பட்ட சரியான டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக டிஜிட்டல் மெட்ரோ பாஸ்கள் வழங்கப்படும். இந்த மெட்ரோ பாஸை பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு மிக அருகில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சென்று திரும்ப முடியும்.

நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்கள் டிஜிட்டல் மெட்ரோ பாஸில் உள்ள தனித்துவமான க்யூஆர் குறியீட்டை தானியங்கி கட்டணம் பெறும் இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு மெட்ரோ பாஸ்களை ஒரு சுற்றுப்பயணத்துக்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். Paytm Insider மூலம் வாங்கப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணம் கிடைக்கும். இந்த சலுகைக்கு வேறு எந்த டிக்கெட்டுகளும் அல்லது பாஸ்களும் தகுதி பெறாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+