சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் 100 வயதுக்கு மேல் வாழும் 38 பேர்... அதாவது 19 தாத்தா, 19 பாட்டி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நூறு வயதைத் தாண்டியும் வாழும் 38 பேர் தமிழக அரசால் கவுரவிக்கப் பட்டிருக்கிறார்கள்.

கடந்த திங்கள் கிழமையன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை மாநகரில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டிகள், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழக்கும் விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சென்னையில் 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்ந்து வரும் மூத்தக் குடிமக்கள் வரவழைக்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டனர்.

கவுரப்படுத்தப்பட்ட அந்த சென்னை வாழ் மூத்த குடிமக்கள் பற்றிய விவரங்கள் :-

மொத்தம் 38 பேர்....

மொத்தம் 38 பேர்....

சென்னை முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 38 பேர் 100 வயதுக்கு மேல் உயிருடன் வாழ்வது தெரிய வந்துள்ளது.

சரிசமமாக...

சரிசமமாக...

இதில், சரிசமமாக 19 பேர் ஆண்கள், 19 பேர் பெண்கள்.

மீன் பிரியர்கள்....

மீன் பிரியர்கள்....

அவர்களில் 20 பேர் சைவ உணவும், மீதமுள்ள 18 பேர் இறைச்சியை தவிர்த்து மீன் மட்டுமே கூடுதலாக உண்பவர்கள்.

தீய பழக்கவழக்கம் இல்லை....

தீய பழக்கவழக்கம் இல்லை....

இவர்களில் யாரிடமும் மது, புகை போன்ற கெட்ட பழக்கவழக்கங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ருக்மணிப் பாட்டி...

ருக்மணிப் பாட்டி...

சென்னையில் அதிக வயதில் உயிர் வாழ்பவர் என்ற பெருமை சென்னை அம்பத்தூர் அருகே உள்ள ஒரகடத்தை சேர்ந்த 109 வயதுடைய ருக்மணி அம்மாள் என்பவர் ஆவார்

English summary
The Tamilnadu government has honored people living even after 100 years. It includes 19 males and 19 females.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X