ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையர் யூஸ் பண்றீங்களா? இந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டாம்.. முக்கிய ‛அட்வைஸ்’
சென்னை: தண்ணீரின் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையரை பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்த வேண்டாம். மீறி பயன்படுத்தினால் மெயின் பில்டர் பழுதாக வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வாட்டர் இன்டஸ்ட்ரீஸ் ரீடெய்லர்ஸ் அசோசியேஷன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் வீடுகளில் தண்ணீரை சுத்திகரிக்க ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையர் சாதனத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது வீடு, கடைகள் உள்பட வணிக வளாகங்கள், கல்லூரிகளில் ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையரின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தான் தமிழ்நாடு வாட்டர் இன்டஸ்ட்ரீஸ் ரீடெய்லர்ஸ் அசோசியேஷன் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரையை வழங்கி வருகிறது.
அதாவது தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்து உள்ளதாலும், வரும் 4ம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்க உள்ளதாலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையரை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையர் பயன்படுத்தும் தமிழக மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். உங்களது ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். தண்ணீரின் வெப்பநிலை அதிகமாக இருப்பதினால் மெயின் பில்டர் விரைவில் பழுதாகிவிடும். இதனால் குறிப்பிட்ட அந்த நேரத்தில் ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையரை பயன்படுத்த வேண்டாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்கிறது. பல இடங்களில் வெப்ப அலை என்பது வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் எனவும், வெப்ப அலை வீசும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதோடு சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 7 நாட்களுக்கு அதாவது மே 6ம் தேதி வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருந்தாலும் கூட அதிகபட்ச வெப்பநிலை என்பது 39 டிகிரி செல்சியஸாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வரும் 4ம் தேதி முதல் கத்திரி வெயில் காலம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு வாட்டர் பியூரிஃபையர் ரீடெய்லர்ஸ் அசோசியேஷன் இந்த முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications