Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீதிக்கட்சி + சுய மரியாதை இயக்கம் = திராவிடர் கழகம்! திராவிட இயக்கத்தின் கிழக்கு திசை பெரியார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிட இயக்கத்தின் கிழக்கு திசையாக கருதப்படும் பெரியாரின் 144வது பிறந்தநாளான இன்று, உலகம் முழுவதும் உள்ள திராவிட இயக்க ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

மனிதர்களில் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு வாழ்நாள் முழவதும் தொண்டாற்றியவர் பெரியார்.

சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு ஆகியவற்றுக்காக தொடர்ந்து போராடிய பெரியார், நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத்தில் பயணித்தது பற்றிய ஒரு சிறிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

1926 தேர்தல்

1926 தேர்தல்

1926ஆம் ஆண்டு நவம்பரில் சென்னை சட்டசபைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிராமணர் அல்லாதோர் கட்சி படுதோல்வியடைத்தது. சுயராஜ்யக் கட்சி வெற்றி பெற்றது. அப்போது சுயராஜ்யக் கட்சியினர் சென்னையில் அமைச்சர் பதவி ஏற்க முயன்றனர். அவர்களுள் யார் முதலமைச்சர் ஆவது என்ற குழப்பம் வந்தது. இதனால் அமைச்சரவை அமைக்காமல் விட்டனர். அச்சமயம் டாக்டர் சுப்பராயன் சுயேச்சைக் கட்சியின் பெயரால் அமைச்சரவையை அமைத்தார். இதனை சுயராஜ்யக் கட்சியினர் பின்னிருந்து ஆதரவளித்தனர்.

நீதிக்கட்சியினர் சோர்வு

நீதிக்கட்சியினர் சோர்வு

இதனிடையே தோல்வியடைந்த நீதிக்கட்சியினர் சோர்ந்து அயர்ந்துவிட்டனர். தலைவர்கள் இவ்வளவுதான் நமது அரசியல் வாழ்வு என்று எண்ணி வீட்டுக்குள் உட்கார்ந்து விட்டனர். ஆனால், பெரியார் சிறிதும் தளர்ச்சியடையவில்லை. தோல்வியும் நன்மைக்கே என்று வீரமுழக்கஞ் செய்தார். அவர் அளித்த ஊக்கம் ஒரு மாநாடாக உருவெடுத்தது. 1926 ஆம் ஆண்டு டிசம்பர் 25, 26ஆம் தேதிகளில் மதுரையில் பிராமணர் அல்லாதோர் மாநாடு நடைபெற்றது.

 பனகல் அரசர் மறைவு

பனகல் அரசர் மறைவு

வெண்ணெய் திரளும்போது தாழி உடைந்தது போல், 16-12-1928 இல் திடீரென்று நீதிக்கட்சித் தலைவர் பனகல் அரசர் இறந்தார். இதனால் நீதிக்கட்சிக்குப் பேரிழப்பு நேர்ந்தது. பனகல் அரசர் இறந்ததால் இயக்கம் தளர்ந்து போய் விடவில்லை என்று மக்கள் உணரும்படி ஊக்கம் ஊட்டி வந்தார் பெரியார். இதன் பலனாக 1929ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17,18-ஆம் நாட்களில் செங்கற்பட்டில் முதல் மாநில சுயமரியாதை மாநாடு நடைபெற்றது.

 செங்கல்பட்டு மாநாடு

செங்கல்பட்டு மாநாடு

இம்மாநாட்டிற்கு W.P.A.சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். சமூகச் சீர்திருத்தத்தில் ஆர்வம் கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து குழுமினர். தீண்டாமை, ஜாதி பேதம் ஒழிப்பது, மதக் குறிகளை விட்டுவிடுதல், ஜாதியைக் குறிக்கும் பட்டப் பெயர்களை நீக்குதல், புரோகிதத்தை அடியோடு நீக்குதல், கோவில் களில் பூஜை செய்யத் தரகர் கூடாது, கடவுள் வணக்கத்திற்காக ஒரு காசு கூடச் செலவிடக் கூடாது, பெண்களுக்குச் சம உரிமை கொடுப்பது என்பவை போன்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேறின.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

இப்படி நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் ஒரே நேர்கோட்டில் பயணித்த நிலையில் 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு திராவிடர் கழகமாக சேலத்தில் வைத்து பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெரியாரின் விருப்பப்படி சேலம் மாநாட்டில் அண்ணா இதனை நிகழ்த்திக் காட்டினார் என்பது வரலாறு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+