PF, EPFO கணக்கு வைத்திருப்போருக்கு ஜாக்பாட்: நாளை பட்ஜெட்டில் வெளியாகும் ஸ்வீட் சர்ப்ரைஸஸ்?
சென்னை: 2026 பட்ஜெட்டில் பிஎஃப் சம்பள உச்சவரம்பு மற்றும் ஓய்வூதியத் தொகையை உயர்த்தி, தனியார் துறை ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் நீண்டகால சேமிப்பு மற்றும் வரிச் சலுகை கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது..
2026ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

குறிப்பாக தனியார் துறை ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், இந்த பட்ஜெட்டில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது. தற்போது உள்ள பொருளாதார சூழலில், ஊழியர்களின் கைகளில் அதிக பணம் புழங்கும் வகையில் வரி சலுகைகள் மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் பெரிய மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஃப் கணக்கு வைத்திருப்போருக்கு
தற்போதைய விதிமுறைப்படி, பிஎஃப் பங்களிப்பு ஆண்டுக்கு 2.5 லட்சத்தைத் தாண்டினால் வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது.. இந்த வரம்பை 10 லட்சமாக உயர்த்துவது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இது ஒருபுறமிருக்க, வேலை மாறும் ஊழியர்களுக்கு வசதியாக, வரி விலக்கு பெறுவதற்கான ஐந்தாண்டு காலக் கெடுவை 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.
இத்தகைய மாற்றங்கள் ஊழியர்களின் சேமிப்பை பாதுகாப்பதுடன், நிதி சுதந்திரத்தையும் உறுதி செய்யும் என்று கருதப்படுகிறது...
ஊதிய வரம்பு உயர்வு
மேலும், இபிஎஃப் திட்டத்திற்கான குறைந்தபட்ச ஊதிய வரம்பை 15,000 ரூபாயிலிருந்து 21,000 ரூபாயாக உயர்த்தவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை அமலுக்கு வரும் பட்சத்தில், லட்சக்கணக்கான புதிய ஊழியர்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள்.
முக்கியமாக கடந்த 11 வருஷமாக மாற்றமில்லாமல் இருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையான 1000 ரூபாயை, 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது ஓய்வூதியதாரர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு, இந்த பட்ஜெட்டில் இதற்கான விடை கிடைக்கும் என்று ஒட்டுமொத்த நடுத்தர வர்க்கத்தினரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்...
இபிஎஃப் ஓ 25000 உயர்வு?
அதேசமயம் இங்கு இபிஎஃப் ஓ பற்றியும் சொல்ல வேண்டி உள்ளது.. தொழிலாளர்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயல்படுத்தப்படும் இபிஎஃப்ஓ திட்டத்தில், தற்போதுள்ள கட்டாய சம்பள உச்சவரம்பை 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
வழக்கமாக ஒரு தொழிலாளியின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதம் வருங்கால வைப்பு நிதியாகப் பிடித்தம் செய்யப்படுகிறது.. அதே அளவிலான தொகையை நிறுவனமும் தொழிலாளியின் கணக்கில் செலுத்துகிறது.
வலுவான நிதி பாதுகாப்பு
கடந்த 2014ல் இந்த சம்பள வரம்பு 6,500 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்ட நிலையில், சுமார் 12 வருஷத்துக்கு பிறகு இப்போது மீண்டும் ஒரு பெரிய மாற்றத்திற்கு அரசு தயாராகி வருகிறது.. இந்த வரம்பு உயர்வு நடைமுறைக்கு வந்தால், அதிக ஊதியம் பெறும் பல புதிய தொழிலாளர்கள் கட்டாயமாக பிஎஃப் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள், இது அவர்களின் ஓய்வுக்காலத்திற்கு ஒரு வலுவான நிதி பாதுகாப்பை வழங்கும்..
இருந்தாலும் இந்த வரம்பு உயர்வு ஊழியர்களிடையே கலவையான உணர்வுகளையே ஏற்படுத்தியுள்ளது. சம்பள உச்சவரம்பு 25,000 ரூபாயாக அதிகரிக்கும் போது, பிஎஃப் கணக்கிற்கான பிடித்தம் அதிகமாகும் என்பதால், ஊழியர்கள் கையில் வாங்கும் நிகர சம்பளம் கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது..
சேமிப்பு திட்டம், மருத்துவ செலவுகள்
இது கண்டிப்பாக நடுத்தர மற்றும் அடித்தட்டு ஊழியர்களின் அன்றாட செலவுகளைப் பாதிக்கக்கூடும் என்ற கவலையும் உள்ளது.. ஆனாலும் நீண்ட கால அடிப்படையில் இது ஒரு சிறந்த மறைமுக சேமிப்பாக அமையும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
அவசர தேவைகளுக்கும் மருத்துவ செலவுகளுக்கும் பெரிதும் கைகொடுக்கும் இந்தச் சேமிப்பு திட்டம், வரம்பு உயர்வின் மூலம் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை பெருக்க உதவும் என்றும் கருத்து கூறுகிறார்கள்.. எனினும் நாளை மத்திய பட்ஜெட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!!
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications