அக்கவுண்ட்டில் நொடியில் PF பணம்... வந்துவிட்டது பிஎஃப் முறையில் டிஜிட்டல் மாற்றம்! எல்லாம் UPI வசதி
சென்னை: வருங்கால உறுப்பினர்களின் வாழ்க்கை எளிமையாக்கும் நோக்கில் புதிய மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.. ஆம், உறுப்பினர்களுக்காகவே நேரடி பணப்பரிமாற்ற முறை உருவாக்கப்பட்டு வருகிறது.. இந்த முறை எதற்காக கொண்டுவரப்படுகிறது? இதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வருங்கால வைப்பு நிதி எனப்படும் PF என்பது வேலை செய்யும் போது சேமிக்கப்படும் பணமாகும். பொதுவாக இந்த PF பணத்தை ஓய்வு பெறும்போது தான் முழுமையாக எடுக்க முடியும். ஆனால், மருத்துவ செலவு, திருமணம், குழந்தை கல்வி, அவசர தேவைகள் போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்காக, முன்கூட்டியே PF பணத்தை எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

PF பணத்தை ஈஸியாக எடுக்கலாம்
இப்போது நடைமுறையில் இருக்கும் முறையில், பிஎஃப் பணத்தை எடுக்க ஆன்லைனில் விண்ணப்பம் தாக்கல் செய்ய வேண்டும். விண்ணப்பம் கொடுத்த பிறகு, விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, பணம் வங்கிக் கணக்கில் வர குறைந்தது 3 முதல் 10 நாட்கள் வரை ஆகிறது... சில நேரங்களில் அதைவிட அதிக நாட்களும் ஆகின்றன. இதனால் அவசர நேரங்களில் PF பணம் உடனடியாக கிடைக்காமல், உறுப்பினர்கள் சிரமம் அடைகிறார்கள்.
அதனால்தான் இந்த சிக்கலை தீர்க்க, EPFO எனப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, புதிய முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் PF கணக்கில் உள்ள பணத்தை UPI மூலம் நேரடியாக வங்கிக் கணக்கில் பெற்றுக்கொள்ளும் வசதி கொண்டு வரப்படுகிறது... இந்த வசதி அமலுக்கு வந்தால், பிஎஃப் பணம் பெறும் நடைமுறை முழுமையாக எளிமையாகிவிடும்..
புதிய நடைமுறை - பல வசதிகள்
புதிய முறையில், பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது UPI செயலி மூலம் பணம் எடுக்க கோரிக்கை கொடுக்க முடியும்... அந்த கோரிக்கை வந்ததும், EPFO அமைப்பு ஆதார், வங்கி கணக்கு, பிஎஃப் கணக்கு விவரங்களை சரிபார்க்கும்... அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால், பணம் உடனடியாக யுபிஐ-யுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குக்கு டிரான்ஸ்வர் ஆகிவிடும்.. இதனால், பல நாட்கள் காத்திருக்கும் நிலை இருக்காது...
இந்த பணம் வங்கிக்கணக்கில் வந்த பிறகு, அதை யுபிஐ மூலமாக செலவழிக்கவும், ஏடிஎம் மூலம் பணமாக எடுத்துக்கொள்ளவும் முடியும். பாதுகாப்பு காரணங்களுக்காக, யுபிஐ பின் நம்பர் பயன்படுத்தி மட்டுமே இந்த பரிமாற்றம் நடைபெறும். இதன் மூலம், எந்த மோசடியும் நடக்க சான்ஸ் இருக்காது...
இப்போது பிஎப் பணத்தை பெற ஆண்டுதோறும் 5 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகள் இபிஎப்ஓ ஆபீசுக்கு வருகிறதாம்... இந்த விண்ணப்பங்களை கைமுறையாக சரிபார்ப்பதால், அலுவலகங்களுக்கு அதிக நிர்வாக சுமையும் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் புதிய UPI அடிப்படையிலான நேரடி பண பரிமாற்ற முறை வந்தால், இந்த நிர்வாக சுமையும் குறையும்.
யுபிஐ - செயலிகள்
ஆரம்ப கட்டத்தில், இந்த வசதி BHIM UPI செயலி மூலம் மட்டும் வழங்கப்படும். முழு PF தொகையையும் ஒரே முறையில் எடுக்க அனுமதி இருக்காது.
எவ்வளவு தொகை வரை யுபிஐ மூலம் எடுக்கலாம் என்பதற்கான வரம்பு, ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி நிர்ணயிக்கப்படும். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால், எதிர்காலத்தில் PhonePe, Google Pay, Paytm போன்ற பிற முக்கிய யுபிஐ ஆப்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications