சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும்.. பிரதமர் மோடி உறுதி

Google Oneindia Tamil News

சென்னை: ரூ31,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகை புரிந்துள்ளார். பிரதமர் மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவருக்கு சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் இன்று மாலை வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். ஐஎன்எஸ் அடையாற்றில் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

PM Modi Chennai and Hyderabad Visit to inaugurate Various Projects Live Updates in Tamil

Newest First Oldest First
7:52 PM, 26 May

#JUSTIN | ‘சுதந்திர திருநாளை முதன்முறையாக கொண்டாடி வருகிறோம்’ - பிரதமர்
7:51 PM, 26 May

#JUSTIN | ‘தமிழர்களை பெருமைப்பட செய்தது’ - பிரதமர்
7:40 PM, 26 May

#JUSTIN | ‘தமிழ் மொழி நிலையானது’ - பிரதமர்
7:38 PM, 26 May

விழா மேடையில் இருந்து புறப்பட்டு சென்ற பிரதமர் நரேந்திர மோடி
7:38 PM, 26 May

சுதந்திர திருநாள் அமுதபெருவிழாவை இப்போது தான் முதன் முறையாக கொண்டாடி வருகிறோம். 75 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர நாடு என பயணத்தை துவக்கினோம். சுதந்திர வீரர்கள் கண்ட கனவுகளை நாம் நிறைவேற்ற வேண்டும். இது நமது கடமை. இதனை நிறைவேற்றும் வகையில் இந்தியாவை பலமானதாகவும், வளமானதாகவும் மாற்றுவோம் - பிரதமர் மோடி
7:38 PM, 26 May

‛வணக்கம்’ என தமிழில் உரையை முடித்த பிரதமர் நரேந்திர மோடி
7:38 PM, 26 May

பாரத் மாதா கீ.. வந்தே மாதரம் என 3 முறை கூறி உரையை முடித்த பிரதமர் நரேந்திர மோடி
7:36 PM, 26 May

இலங்கை மிகவும் மோசமான நிலையை சந்தித்து வருகிறது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். அனைத்து வகையான உதவிகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது. நிதி உதவி, எரிபொருள், உணவு, மருந்து ஆகியவை இதில் அடங்கும் - பிரதமர் மோடி
7:35 PM, 26 May

பல இந்திய அமைப்புகளும், தனி அமைப்புகளும் இலங்கையில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்து வருகின்றனர். இலங்கைக்கு பொருளாதார ஆதரவு வழங்க சர்வதேச மன்றங்களில் இந்தியா உரக்கமாக பேசியுள்ளது. இலங்கை மக்களுக்கு எப்போதும் இந்திய துணை நிற்கும் - பிரதமர் மோடி
7:35 PM, 26 May

பல இந்திய அமைப்புகளும், தனி அமைப்புகளும் இலங்கையில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்து வருகின்றனர். இலங்கைக்கு பொருளாதார ஆதரவு வழங்க சர்வதேச மன்றங்களில் இந்தியா உரக்கமாக பேசியுள்ளது. இலங்கை மக்களுக்கு எப்போதும் இந்திய துணை நிற்கும் - பிரதமர் மோடி
7:35 PM, 26 May

யாழ்ப்பாணத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நான் சென்றேன். யாழ்ப்பாணம் சென்ற முதல் பிரதமர் நான் தான். இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சுகாதாரம், போக்குவரத்து, வீட்டு வசதி, கலாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது - பிரதமர் மோடி
7:34 PM, 26 May

#JUSTIN | ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ - பிரதமர்
7:33 PM, 26 May

#JUSTIN | பேரை சொன்னாலே சும்மா அதிருதுல்ல...
7:31 PM, 26 May

பிரதமர் மந்திரியின் கதி சக்தி திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு துவக்கினோம். இனி வரும் ஆண்டுகளில் இந்தியாவில் உயர்தரம் வாய்ந்த சிறந்த உள்கட்டமைப்பை கொண்டு வரும் வகையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் இணைத்து செயல்படுத்தப்படும். செங்கோட்டையில் இருந்து இதுபற்றி இருந்தேன். இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.100 லட்சம் கோடிக்கு அதிகமானது. இதை செயல்படுத்த முனைந்துள்ளோம் - பிரதமர் மோடி
7:31 PM, 26 May

தேசிய கல்விகொள்கை காரணமா தொழில்நுட்பம், மருத்துவ படிப்புகளை உள்ளூர் மொழிகளிலேயே படிக்க முடியும். இதனால் தமிழக இளைஞர்கள் பலன் அடைவார்கள் - பிரதமர் மோடி
7:28 PM, 26 May

ஒவ்வொரு இல்லத்துக்கு குடிநீர் கிடைக்க வேண்டும் என பணியாற்றி வருகிறோம். இதன்மூலம் பாரபட்சம், விடுபட்டு விடும் சாத்தியக்கூறு இருக்காது. புறக்கட்டமைப்பில் கவனம் என்பது இந்தியாவின் இளைஞர்கள் அதிகம் பயன்பெறுவார்கள். இளைஞர்களின் எதிர்ப்பார்பை நிறைவேற்ற இது உதவும். செல்வத்தையும், மதிப்பையும் பெற இளைஞர்கள் இதனை பயன்படுத்தி கொள்வார்கள் - பிரதமர் மோடி
7:28 PM, 26 May

பாரம்பரியமாக உள்கட்டமைப்பு என எது கருதப்படுகிறதோ அதை தாண்டி மத்திய அரசு பயணிக்கிறது. மின்சாரம், நீர் மட்டுமே ஒரு காலத்தில் உள்கட்டமைப்பு என கருதப்பட்டது. தற்போது அதையும் தாண்டி எரிவாயு குழாய், இணைப்பு நெடுஞ்சாலை, அதிவேக இணையதள வேகத்தை ஒவ்வொரு கிராமத்துக்கும் கொண்டு சென்று வருகிறோம். இது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்த்து கொள்ளுங்கள் - பிரதமர் மோடி
7:24 PM, 26 May

எந்த நாடுகள் எல்லாம் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்ததோ அவை அனைத்தும் வளரும் நாடுகள் என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடுகளாக மாறின என்பதை வரலாறு கற்பிக்கிறது. உள்கட்டமைப்பு மேம்பாட்டுகளை மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது - பிரதமர் மோடி
7:24 PM, 26 May

சமூக கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் ஏழைகள் நலனை உறுதி செய்ய முடியும். முக்கிய திட்டங்களில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. கழிப்பறை, வீட்டு வசதி, நிதிசார் உள்ளடக்கல் என எதுவாக இருந்தாலும் அனைவரையும் சென்று சேர வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது - பிரதமர் மோடி
7:23 PM, 26 May

#JUSTIN | ‘வணக்கம்.. தமிழகம் மிகவும் சிறப்பான பூமி’ - பிரதமர் மோடி
7:20 PM, 26 May

#JUSTIN | தமிழகத்துக்கான பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!
7:19 PM, 26 May

பெங்களூர்-சென்னை விரைவு சாலை இரண்டு முக்கிய வளர்ச்சி மையங்களை இணைக்கும். சென்னை துறைமுகம்-மதுரவாயல் சாலை மிகவும் திறன் மிக்கதாக மாற்றும். சென்னை போக்குவரத்தை கணிசமாக குறைக்கும் - பிரதமர் மோடி
7:17 PM, 26 May

தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தின் உன்னத அத்தியாயத்தை கொண்டாட கூடியிருக்கிறோம். ரூ.31 ஆயிரம் கோடிக்கும் மேலான திட்டம் துவங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி
7:16 PM, 26 May

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. மகத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டின் மைந்தரான எல் முருகன் சிவப்பு கம்பள வரவேற்பில் தமிழ்நாட்டுக்கு உரிய பாரம்பரிய முறையில் உடையணிந்து பங்கேற்றார். உலகளவில் உள்ள தமிழர்களை பெருமைப்பட செய்தது - பிரதமர் மோடி
7:13 PM, 26 May

தமிழ் மொழி நிலையானது. நித்தியமானது. தமிழ் கலாசாரம் உலகளாவியது. சென்னை முதல் கனடா வரை மதுரை முதல் மலேசியா வரை நாமக்கல் முதல் நியூயார்க் வரை சேலம் முதல் தென்ஆப்பிரிக்கா வரை பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை - பிரதமர் மோடி
7:11 PM, 26 May

ஒவ்வொரு துறைகளிலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தலை சிறந்தவர்களாக உள்ளனர். சமீபத்தில் இந்திய காதுகேளாதோர் ஒலிம்பிக் குழுவினருக்கு எனது இல்லத்தில் வரவேற்பு கொடுத்தேன் பெற்றேன். இதுவரை நடந்த போட்டியில் இதுதான் ஆகச்சிறந்தது. மொத்தம் 16 பதக்கங்களில் தமிழகத்தை சேர்ந்த 6 பேரின் பங்கு இருந்தது. இது மிகச்சிறந்த பங்களிப்பு - பிரதமர் மோடி
7:08 PM, 26 May

சீர்பெருமை நிறைந்த பாரதியார் ‛செந்தமிழ் நாடெனும் போதினிலே... இன்ப தேன்வந்து பாயுது காதினிலே’ என பாடியுள்ளார் - பிரதமர் மோடி
7:05 PM, 26 May

மீண்டும் தமிழகத்துக்கு வருவது என்பது எப்போதும் அருமையான ஒன்று. இது தமிழகம் மிகவும் சிறப்பான பூமி. தமிழக மக்களின் கலாசாரம், மொழி மிக சிறப்பானவை - பிரதமர் மோடி
7:04 PM, 26 May

‛வணக்கம்’ என உரையை துவக்கிய பிரதமர் நரேந்திர மோடி
7:04 PM, 26 May

தமிழகத்துக்கான பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி உரை
READ MORE

English summary
PM Modi Visit to Chennai and Hyderabad (பிரதமர் மோடி சென்னை & ஹைதராபாத் வருகை) LIVE News Updates in Tamil : பிரதமர் மோடி இன்று ஒருநாள் பயணமாக தமிழகம் வருகை தருகிறார். சென்னையில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X