சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

12000 பேர்.. மாமல்லபுரத்தில் குவிந்த போர் கப்பல்கள்.. சீன அதிபர் வருகைக்காக பெரும் பாதுகாப்பு ரெடி!

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை அடுத்து சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சீன அதிபர் வருகைக்காக பெரும் பாதுகாப்பு ரெடி! | PM Modi - Xi Jinping Meet

    சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை அடுத்து சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக மாமல்லபுரத்தில் இந்திய போர் கப்பல்கள் குவிக்கப்பட்டுள்ளது.

    சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று தமிழகம் வருகிறார். அவர் பிரதமர் மோடியை காஞ்சிபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை இந்த ஆலோசனை நடக்க உள்ளது.

    மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

    நீங்க தாராளமா வாங்க.. ஆனால் அவரை அனுமதிக்க மாட்டோம்.. சீன அதிபருக்கு தமிழர்கள் அனுப்பும் மெசேஜ்!நீங்க தாராளமா வாங்க.. ஆனால் அவரை அனுமதிக்க மாட்டோம்.. சீன அதிபருக்கு தமிழர்கள் அனுப்பும் மெசேஜ்!

    சென்னை எப்படி

    சென்னை எப்படி

    சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை அடுத்து சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. சென்னை முழுக்க இதனால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் மட்டுமின்றி மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு என்ன

    பாதுகாப்பு என்ன

    சீன அதிபர் செல்லும் வழியில் எல்லாம் பாதுகாப்பு அதிகாரிகள் சீருடையிலும், மப்தியிலும் நிற்கவைக்கப்பட்டுள்ளனர். கிண்டி தொடங்கி மாமல்லபுரம் வரை அதிக அளவில் அதிகாரிகள் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 12000 அதிகாரிகள் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சீனா எப்படி

    சீனா எப்படி

    இது இல்லாமல் சீனாவை சேர்ந்த சிறப்பு பாதுகாப்பு படை வீரர்களும் தற்போது தமிழகத்தில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். சீன அதிபருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கும் தனிப்பட்ட அதிகாரிகள் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    போர் கப்பல்

    போர் கப்பல்

    அதேபோல் மாமல்லபுரம் அருகே கடலில் இந்திய கடற்படை போர் கப்பல்கள் குவிக்கப்பட்டு இருக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை அடுத்து பாதுகாப்பிற்காக போர் கப்பல்கள் கடலில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.எந்த விதமான தாக்குதலையும் சமாளிக்கும் விதமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    English summary
    PM Modi - Xi Jinping Meet: Indian Coast Guard has deployed warships at some distance from Mamallapuram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X