அதிமுக விழும் போது தாங்கி பிடித்தோம்..வார்த்தைகளில் கவனம்..ஜெயக்குமாருக்கு பாமக பாலு பதிலடி
சென்னை: அதிமுக விழும்போதெல்லாம் பாமகதான் கைகொடுத்துள்ளது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியும் வழக்கறிஞருமான பாலு கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசும் போது அரசியல் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் கவனமாக பேச வேண்டும் என்றும் பாலு தெரிவித்துள்ளார். அதிமுகவை வீணாக சீண்டினால் அதற்கு தக்க பதிலடி எங்கள் தரப்பில் இருந்து நிச்சயம் கொடுக்கப்படும் என்று ஜெயக்குமார் கூறிய நிலையில் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாமக நிர்வாகி பாலு.
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் 2022ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2023ம் ஆண்டை வரவேற்போம் என்ற தலைப்பில் புதுச்சேரி அருகே பட்டானூரில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 'கடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதால் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் என்றார்.
தற்போது அதிமுக 4 ஆக உடைந்து உட்கட்சி பூசலால் தவித்து வருகிறது. இதனால் திமுகவுக்கு அடுத்தபடியாக 2வது பெரிய கட்சியாக பாமக தான் உள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட 40 லோக்சபா தொகுதியிலும் விரைவில் நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்று ஆவேசமாக பேசினார்.

அன்புமணியின் பேச்சுக்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்தார். செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுக இல்லை என்றால் பாமக என்ற கட்சியே வெளியே தெரிந்திருக்காது. ஜெயலலிதா கூட்டணி வைத்த பின்னர் தான் பாமகவிற்கு அங்கீகாரம் கிடைத்தது. அதற்கு முன்பு பாமகவிற்கு அங்கீகாரமே கிடையாது. 1991 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாமக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் பிறகு வந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாமகவால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பதை அன்புமணி ராமதாஸ் நினைத்துப் பார்க்க வேண்டும்.
1998 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமகவிற்கு 5 சீட்டு கொடுக்கப்பட்டது. அதில் நான்கு இடத்தில் அதிமுகவின் தயவால், பாமக வெற்றி பெற்றார்கள். நான்கு இடத்தில் வெற்றி பெற்றதால் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தால் பாமகவிற்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.இவற்றையெல்லாம் மறந்து விட்டு நன்றி மறந்து அன்புமணி ராமதாஸ் இப்படி பேசினால் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல,பாமக தொண்டர்கள் கூட உங்களை மதிக்க மாட்டார்கள்.
அதிமுகவால் மட்டுமே சட்டசபையிலும் லோக்சபாவிலும் பாமகவினர் உள்ளே சென்றீர்கள். உங்கள் கட்சி நிகழ்வில் உங்கள் தொண்டர்களை மகிழ்விக்க நீங்கள், "பாமக தான் இனி அடுத்த ஆளும் கட்சி" என்பது போன்று என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். அதற்காக பலம் வாய்ந்த அதிமுகவை சிறுமைப்படுத்த வேண்டும் என்று நினைத்து பேசினால் அதிமுக சிறுமை ஆகி விடுமா?
அதிமுக தான் அன்புமணி ராமதாஸுக்கு எம்பி என்ற பதவியை அடையாளம் காட்டியது. அதனால் தான் அவர் மத்திய அமைச்சர் ஆனார். அன்புமணி ராமதாஸின் கருத்தை யாரும் எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது போன்ற கருத்துக்களை சொல்லி சிறுமைப்படுத்துகின்ற வேலையை எதிர்காலத்தில் அன்புமணி ராமதாஸ் இனி வரும் காலங்களில் செய்ய வேண்டாம். அதிமுகவை வீணாக சீண்டினால் அதற்கு தக்க பதிலடி எங்கள் தரப்பில் இருந்து நிச்சயம் கொடுக்கப்படும். அவர் ஒன்றை சொன்னால் அதிமுக சார்பில் நூறு சொல்வோம் என்று சொன்னார் ஜெயக்குமார்.
இந்த நிலையில்தான் ஜெயக்குமார் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாமக நிர்வாகி பாலு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலு, அதிமுக பிளவுபட்டிருப்பது என்பது குழந்தைகளுக்கே தெரியும் என பாமக நிர்வாகி பாலு தெரிவித்துள்ளார். அதிமுக விழும்போதெல்லாம் பாமக உதவி செய்துள்ளது என்று கூறினார். பாமகவால் தான் ஜெயலலிதா முதலமைச்சரானார் என நாங்கள் ஒரு போதும் கூறவில்லை எனவும் கூறினார். எங்களால்தான் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு ஆண்டுகள் முதல்வராக நீடித்தார் என்று நாங்கள் கூறவில்லை என்றும் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, கூட்டணி பற்றி தேர்தல் வருவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பாக முடிவு எடுக்கப்படும். எங்களுடைய கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூடி முடிவு எடுக்கும். கூட்டணி குறித்து முடிவெடுக்கக் கூடிய நேரம் இது இல்லை. இப்போது கட்சியை வலிமைப் படுத்தும் பணிகளை செய்து வருகிறோம்.
எடப்பாடி பழனிச்சாமி சொல்ல வேண்டும் என்று நினைப்பதை எல்லாம் ஜெயக்குமார் சொல்வார் என்று கூறுகிறார்கள். அது பற்றி எனக்கு தெரியாது என்றும் பாலு கூறினார். 22 தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடாததால் நாங்கள் அதிமுகவின் வெற்றிக்கு காரணமாக இருந்தோம் என்றும் அதிமுகவின் ஜெயக்குமாருக்கு பாமக நிர்வாகி பாலு பதிலடி கொடுத்துள்ளார்.
-
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர்












Click it and Unblock the Notifications