சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்களுக்கு தேவை 33 தொகுதிகள்... அதிமுகவிடம் லிஸ்ட் போட்டு கொடுத்த பாமக

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 33 தொகுதிகளை கேட்டு பாமக பட்டியல் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அறிவிக்கப்பட்ட போதும் பாஜக இதனை இன்னமும் ஆதரிக்கவில்லை.

இதேபோல் அதிமுக கூட்டணியில் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிற பாமகவும், முதல்வர் வேட்பாளரை டாக்டர் ராமதாஸ்தான் அறிவிப்பார் என கூறியுள்ளது. இந்த நிலையில் அதிமுகவிடம் 33 தொகுதிகளை பாமக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தம் 33 தொகுதிகள்

மொத்தம் 33 தொகுதிகள்

வடதமிழகம், மேற்கு மாவட்டங்களில் 28 தொகுதிகளையும் தென் தமிழகத்தில் 5 தொகுதிகளையும் பாமக கேட்டுள்ளதாம். பாமகவின் இந்த பட்டியல் தொடர்பாக அதிமுக மூத்த தலைவர்கள் விவாதித்துள்ளனர்.

அதிமுக தலைவர்கள் தயக்கம்

அதிமுக தலைவர்கள் தயக்கம்

வடதமிழகத்தில் பாமக கேட்கும் தொகுதிகளை கூட ஒதுக்கிவிடலாம்; ஆனால் மேற்கு மாவட்டங்களில் அதிமுகவுக்குதான் அதிக செல்வாக்கு உள்ளது; ஏற்கனவே பாஜகவும் அதிக தொகுதிகளை அந்த பகுதியில் கேட்கிறது; பாமகவும் சில தொகுதிகளை கேட்டுள்ளது.

மேற்கு மாவட்டத்திலும்..

மேற்கு மாவட்டத்திலும்..

இதற்கு ஒப்புக் கொண்டால் அதிமுக வெற்றி பெறக் கூடிய மேற்கு மாவட்டங்களை நாமே தாரைவார்த்து கொடுத்தது போலாகிவிடுமே என தயங்கி உள்ளனர். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கும் அதிமுக மூத்த தலைவர்கள் கொண்டு சென்றிருக்கின்றனர்.

என்ன செய்யப் போகிறது பாமக?

என்ன செய்யப் போகிறது பாமக?

இதனால் பாமக கேட்கும் 33 தொகுதிகளையும் அப்படியே அதிமுக தூக்கி கொடுக்காது என்றே கூறப்படுகிறது. கேட்கிற தொகுதிகள் கிடைக்காவிட்டால் பாமக என்ன முடிவு எடுக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என நினைக்கின்றனராம் அதிமுக தலைவர்கள்.

English summary
PMK has demanded 33 Seats from North and Western Dists in AIADMK Alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X