கிரிஸ்ராக்கிற்கு பளார் விட்ட வில் ஸ்மித்..சபாஷ் சரியான தண்டனை! உண்மையான கதாநாயகன்.. ராமதாஸ் பாராட்டு
சென்னை : ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தனது மனைவி குறித்து கிண்டல் செய்ததால் கிரிஸ்ராக்கை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அறைந்த நிலையில், சபாஷ்.... சரியான தண்டனை! வில் ஸ்மித் உண்மையான கதாநாயகன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கிங் ரிச்சர்ட் என்ற படத்திற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது இன்று வழங்கப்பட்டுள்ளது.
விழாவில் தனது மனைவி குறித்து கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித் கிரிஸ்ராக்கை மேடையில் ஏறி யாரும் எதிர்பாராதவிதமாக ஓங்கி அறைந்தார். இதனால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஆஸ்கர் விருது
இந்நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தனது மனைவி குறித்து கிண்டல் செய்ததால் கிரிஸ்ராக்கை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அறைந்த நிலையில், சபாஷ்.... சரியான தண்டனை! வில் ஸ்மித் உண்மையான கதாநாயகன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "சபாஷ்.... சரியான தண்டனை! ஹாலிவுட் டால்பி திரையரங்கத்தில் இந்திய நேரப்படி இன்று காலை அகாடமி விருது (ஆஸ்கர் விருது) வழங்கும் விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வழங்குவதற்காக கிரிஸ் ராக் என்ற நகைச்சுவை நடிகர் மேடையேறினார்.

நடிகர் வில் ஸ்மித்
அப்போது நகைச்சுவை செய்வதாக நினைத்துக் கொண்டு, நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட்டின் தலைமுடி பிரச்சினையை கிண்டல் செய்தார். ஜடாவுக்கு alopecia என்ற முடி உதிரும் நோய் இருக்கிறது. கிரிஸ்ராக்கின் நகைச்சுவைக்கு பெரிய வரவேற்பு இல்லை. வில்ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுவதால் அதை வாங்குவதற்காக வந்திருந்தார்.

செயல் மிகவும் சரியானது
கிரிஸ் ராக்கின் நகைச்சுவையைக் கேட்டு வில்ஸ்மித் ஆரம்பத்தில் சிறிது சிரித்தார். ஆனால், அருகிலிருந்த அவரது மனைவியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைப் பார்த்து கொதித்துப் போனார். உடனடியாக மேடையில் ஏறிய வில் ஸ்மித் கிரிஸ்ராக்கின் கன்னத்தில் பளார் என அறைந்திருக்கிறார். அவை நாகரிகத்தையெல்லாம் விடுங்கள். வில் ஸ்மித்தின் செயல் மிகவும் சரியானது. கிரிஸ்ராக்கின் செயலுக்கு உடனடியாக சரியான தண்டனை கொடுத்திருக்கிறார்.அதுமட்டுமல்ல.... ஜடாவை தாம் கிண்டல் செய்ததில் உள்நோக்கமில்லை என்று கிரிஸ்ராக் விளக்கமளித்த போது அதை ஸ்மித் ரசிக்கவில்லை.

மருத்துவர் ராமதாஸ்
அப்போதும் கூட என் மனைவியின் பெயரை உச்சரிக்கக்கூட உனக்குத் தகுதியில்லை என்று பொங்கியிருக்கிறார். அவர் உண்மையான கதாநாயகன். இந்த நிகழ்வு சொல்லியிருப்பது இரண்டு உண்மைகளை.. 1. ஒருவரின் ஊனத்தை,(body shaming) குறையை நகைச்சுவைக்கான கருப்பொருளாக்காதீர்கள். 2. மனைவியையும், அவரது உணர்வையும் மதித்தால் உலகம் உங்களை மதிக்கும்! " என பதிவிட்டுள்ளார்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications