போக்குவரத்து விதிமீறல்.. சென்னையில் விரட்டிவிரட்டி பிடிக்கும் போலீஸ்.. 10 நாள் வசூல் இவ்வளவா!
சென்னை: சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் அமலான 10 நாட்களில் 17,453 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1.41 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறு நபர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது.
இந்த புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் கடந்த வாரம் முதல் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.

ரூ.10 ஆயிரம் அபராதம்
அதன்படி ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸில் ஈடுபடுதல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் வாகன ஓட்டுநர் குடிபோதையில் இருந்து, பின்னால் அமர்ந்து செல்வோர் குடிபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

போக்குவரத்து போலீஸ்
புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் கடந்த அக்.26 முதல் அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கும், முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தை இயக்கியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் பல வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல்துறையினர் விதித்த அபராத தொகையை செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க போக்குவரத்து போலீசார், நீதிமன்றம் மூலம் வாரண்ட் பெற்று குறிப்பிட்ட வாகன ஓட்டிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

வாகனங்கள் பறிமுதல்
நீதிமன்ற வாரண்ட் வழங்கி 14 நாட்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராத தொகை செலுத்தவில்லையென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது போல கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராத தொகை செலுத்தாத 50 வாகன ஓட்டிகளின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்திற்கு விட இருப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

10 நாளில் ரூ.1.41 கோடி வசூல்
சென்னையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் நேற்று வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30,699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. ரூ.1.41 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் 17,453 வழக்குகளுக்குண்டான அபராத தொகை ரூ.70.46 லட்சம் வாகன ஓட்டிகளிடம் பெறப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

போதையில் வாகனம் ஓட்டிய அபராதம்
குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 591 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.37.68 லட்சம் ரூபாயை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக 2678 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.10.52 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சீட் பெல்ட் அணியாத காரணத்திற்காக 340 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 2.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications