ஹிஜாப் தீர்ப்பு.. நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்..மேலும் ஒருவரை கைது செய்த போலீசார்.. நீளும் லிஸ்ட்.!
சென்னை : ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்களில் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையை பெங்களூரு போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் அணிவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு அளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரித்து ராஜ், கிருஷ்ணா தீக்சித், ஜே.எம் ஹாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கினர்.

ஹிஜாப் விவகாரம்
அதில், ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்று அல்ல என்றும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என தெரிவித்து ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பல்வேறு அரசியல் தலைவர்களும் ஏமாற்றம் தெரிவித்தனர்.

தீர்ப்புக்கு எதிராக போராட்டம்
மேலும் தமிழகத்தில் சென்னை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய பலர் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி தூக்கிலிட வேண்டும் என பேசியதாக கூறப்படுகிறது.

நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்
உணர்ச்சிவசப்படும் சமூகம் எனவும், நீதிபதிகளுக்கு விபத்து போன்றவை ஏதாவது ஏற்பட்டால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான் காரணம் என பேசியதாகவும், இந்த பேச்சுகள் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக இருந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு புகார்களின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேச்சாளரான ஜமால் முகமது உஸ்மான் மற்றும் ரகமதுல்லா ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த புகார் குறித்து பெங்களூரு போலீசார் ரகமத்துல்லாவை அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினர்.

மேலும் ஒருவர் கைது
அவர் அளித்த தகவலின் அடிப்படையில் தற்போது தஞ்சாவூரைச் சேர்ந்த ஜமால் இஸ்லாம் என்பவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே ரகமத்துல்லா மீது பதிவு செய்யப்பட்ட அதே சட்டப்பிரிவுகளின் கீழ் ஜமால் இஸ்லாம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜமால் இஸ்லாம் 4-வது நபராக கைது செய்யப்பட்டுள்ளார் என பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையை பெங்களூரு போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications