மண்டைக்கேறிய கஞ்சா போதை! சிக்கன் மசாலாவால் வந்த சிக்கல்! கல்லாவுடன் கல்தா கொடுத்தவர்கள் கைது..!
சென்னை : சென்னை சேலையூர் பகுதியில் கஞ்சா போதையில் சிக்கன் 65 மசாலா மற்றும் சிக்கன் ரைசில் சிக்கன் குறைவாக இருந்ததாக கூறி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தாம்பரம் அடுத்த சேலையூர் அகரம் செல்லும் பிரதான சாலையில் ராஜா என்பவர் ஃபாஸ்ட் ஃபுட் நடத்தி வருகிறார்.
நேற்று மதியம் காரில் வந்த 5 பேர் உணவகத்தில் பரோட்டா, சிக்கன் ரைஸ், சில்லி சிக்கன் போன்ற உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர்.

கஞ்சா போதை
இந்நிலையில் உணவுகளை பார்சல் ஆர்டர் செய்ய வந்தவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஊழியர்கள் ஆர்டர் செய்த உணவுகளை பார்சல் செய்து கொண்டிருக்கும் போது, ஒருவர்
சமையல் மாஸ்டரிடம் சிக்கன் 65ல் மசலாவே இல்லை என்று கிண்டல் அடித்துள்ளார்.

சிக்கன் ரைஸ்
மேலும் சிக்கன்ரைஸில் சிக்கனே இல்லை எனவும் கூறி ஊழியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உடன் இருந்த நபர்கள் திடீரென பாஸ்ட் புட் மாஸ்டரை அடித்தனர். இதனால் கடையில் வேலைப்பார்க்கும் நபர்களுக்கும், உணவு வாங்க வந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

உரிமையாளர் மீது தாக்குதல்
ஒரு கட்டத்தில் போதை வாலிபர்கள் காரில் இருந்து பட்டாகத்தியை எடுத்துகாட்டி மிரட்டி விட்டு தப்பி சென்றனர். மேலும் தப்பி செல்லும் போது ஆர்டர் செய்த உணவினையும் பணம் கொடுக்காமல் எடுத்து சென்று விட்டனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சியுடன் கடையின் உரிமையாளர் ராஜா சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

4 பேர் கைது
புகாரின் பேரில் சிசிடிவி காட்சி மற்றும் காரின் நம்பரை வைத்து மணிகண்டன், ரோகித், அரவிந்த் உள்ளிட்ட 4 பேரை போலீசார் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாக கஞ்சா மற்றும் போதை பொருட்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் ஆபரேஷன் திட்டம் காவல்துறை மூலம் செயல்பட்டு வருகிறது ஆனாலும் சில பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாகவும் காவல்துறையினர் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications