பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை! பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இது ஒரு பாடம்! -ராமதாஸ்
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரித்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இது ஒரு பாடம் எனவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். அரசியலும், பொதுவாழ்க்கையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும், அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதையும் ராமதாஸ் வரவேற்கிறார் என்பது தெரிய வருகிறது. இது குறித்து ராமதாஸ் விடுத்துள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு;
''வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒரு பாடம்.
அரசியலும், பொதுவாழ்க்கையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு துணை செய்யும். இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.'' இவ்வாறு ராமதாஸ் தனது பதிவில் கூறியுள்ளார்.
இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 3 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி இழந்துவிட்டார் பொன்முடி. இதனால் அவரது திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் பாமக தனித்து களம் காணக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. பாமகவை பொறுத்தவரை ஏற்கனவே ஒருமுறை திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications