‘அண்ணன்’ சீமானுக்கு புத்தம் புது ‘ஃபார்ச்சூனர்' கந்தசாமி கோவிலில் நடந்த பூஜை! இங்கு வர என்ன காரணம்?
சென்னை : இயக்குனரும், நடிகரும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கு வாங்கப்பட்டுள்ள புதிய ரக சொகுசு காருக்கு திருப்போரூரில் உள்ள கந்தசாமி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த ஆலயத்தில் அவரது காருக்கு பூஜை செய்ய என்ன காரணம் என்பது குறித்தான சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குனர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட திரைக்கலைஞரான சீமான், 1996ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.
மறைந்த இயக்குனர் மணிமணனின் பல திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய இவர் கடந்த காலங்களில் பெரியாரிய ஆதரவாளராக இருந்த அவர், பின்னர் தமிழ் தேசிய அரசியலில் களமிறங்கினார்.

நாம் தமிழர் கட்சி
இலங்கை இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற படுகொலைக்கு நீதி கேட்டு நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசியதற்காக கைதாகி சிறையில் இருந்த அவர் இலங்கை விடுதலை புலிகள் இயக்கத் தலைவரான பிரபாகரன் மீது பற்று கொண்டவராக வலம் வந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கிய நிலையில் இன்று தமிழகத்தின் முக்கிய கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவாகி இருக்கிறது.

சீமான்
கட்சி தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தற்போது வரை தனித்து போட்டியிட்டு வருகிறார். பெரிய தேர்தல்களில் அவ்வளவாக ஜொலிக்காவிட்டாலும் பிரதான கட்சிகளை மிரளும் அளவிற்கு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் நாம் தமிழர் கட்சிக்கு உண்டு. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் நாம் தமிழர் கட்சிக்கு கிளைகள் உள்ளதாக கட்சியினர் கூறி வருகின்றனர்.

புது டொயோட்டா ஃபார்ச்சூனர்
நாம் தமிழர் கட்சிக்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் நன்கொடை பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்காக வாங்கிய புது டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு திருப்போரூரில் உள்ள கந்த சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. 8 என்ற பதிவெண்ணுடன் கருப்பு நிறத்தில் வாங்கப்பட்டுள்ள இந்த காருக்கு பூஜை செய்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானே நேரடியாக கோயிலுக்கு வந்தார். அவரை கட்சியினர் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

சிறப்பு பூஜை
தொடர்ந்து காருக்கும் மூலவர் காலடியில் வைத்து காரின் சாவிக்கும், கோவில் வளாகத்தில் அபிஷேகம் செய்து காருக்கும் பூஜை செய்யப்பட்டது. திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வருவது முதல் முறையல்ல தனது குழந்தைக்கு இந்த கோவிலில் தான் சீமான் மொட்டை அடித்து துலாபாரத்தில் அரிசி மற்றும் வெல்லம் வழங்கினார். தற்போதும் தான் வாங்கிய புதிய காருக்கு அங்குதான் பூஜை நடந்துள்ளது.
-
Thaaimaaman seer: சீமான் மகளுக்கு தாய்மாமன் சீர் ஏன்? அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு விளக்கம் -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications