சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஜெர்க்" ஆன பாஜக.. கதறவிடும் பிகே.. ஸ்டாலினின் பங்கு என்ன.. சரத்பவார் கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா?

தேசிய அரசியலில் திமுக எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: 3வது அணி கிடையாதாம்.. ஆனால், பாஜகவுக்கு எதிராக அணி திரள்வது என்று தேசிய அரசியல் நகர்கிறது.. சரத்பவாருடனான சந்திப்புக்கு பிறகு பிரசாந்த் கிஷோர் என்ன திட்டத்தில் உள்ளார்? ஒருவேளை பாஜகவுக்கு எதிரான அணியில் திமுகவும் முக்கிய இடத்தை பெறுமா என்ற ஆர்வம் எழுந்துள்ளது..!

நடந்த முடிந்த 5 மாநில தேர்தலில் குறைந்தபட்சம் 3 மாநிலங்களிலாவது பாஜக ஆட்சியை பெற நினைத்து.. இதற்காக பாடுபட்டு உழைத்தது..

ஆனால், மேற்கு வங்கத்தில் மம்தா ஒற்றை நபராக கெத்து காட்டி விட்டார்.. கேரளாவிலும் சரி, நம்மிடமும் சரி, பாஜகவால் எதுவுமே செய்ய முடியாத சூழல் உள்ளது.. அசாமில் மட்டும் ஆட்சியை தக்க வைத்தது.

 5 மாநிலம்

5 மாநிலம்

இந்த 5 மாநில தேர்தலில் மிக அதிகமாக பேசப்பட்டவர் பிரசாந்த் கிஷோர்.. மம்தாவுக்கு இவர்தான் ஆலோசகர்.. இவர் கடந்த சில நாட்களாகவே முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.. அப்படித்தான் சரத்பவாரையும் சந்தித்து பேசினார். எதற்காக சரத்பவாரை இவர் பார்த்து பேசுகிறார்? ஒருவேளை பாஜகவுக்கு எதிராக 3ஆவது அணியை அமைக்க போகிறார்களோ? என்ற எண்ணம் வலுத்தது.

 3வது அணியா?

3வது அணியா?

ஆனால், அப்படி எதுவுமே இல்லை என்றும், 3வது, 4வது அணியெல்லாம் சாத்தியமில்லை என்றும் பிகே தெளிவுபடுத்திவிட்டார். அப்படியானால் ஏன் இந்த சந்திப்பு? என்ற கேள்வி எழுகிறது. சரத் பவாரை பொறுத்தவரை பழுத்த அரசியல்வாதி.. காங்கிரஸ் கட்சிக்கு தலைமை பதவியை ராகுல் ஏற்க மறுத்து வரும் நிலையில், சரத் பவார் ஒருவேளை அந்த பதவியை ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே கிளம்பியது..

 தேசியவாத காங்கிரஸ்

தேசியவாத காங்கிரஸ்

அப்படி காங்கிரசுக்கு தலைமை வகிக்கும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை, காங்கிரசுடன் இணைப்பாரோ? என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால், சரத்பவார் ஆதை மறுத்துவிட்டார்.. ஐமு கூட்டணி தலைவர் பொறுப்பை ஏற்பதில் சுத்தமா ஆர்வமும் இல்லை.. நேரமும் இல்லை... என்று சொல்லிவிட்டார்.

சரத்பவார்

சரத்பவார்

அப்படியானால், காங்கிரசுக்கு எதிரான மனநிலைமையிலேயே சரத்பவார் இப்போதும் இருக்கிறாரா? காங்கிரசுக்கு கல்தா தரப்போகிறாரோ? வரப்போகும் தேர்தலை கணக்கில் கொண்டு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பாரோ,? இதற்குதான் பிரசாந்த் கிஷோர் உதவி செய்ய போகிறாரோ என்பன போன்ற சந்தேகங்களும் எழுகின்றன.

 எம்பி தேர்தல்

எம்பி தேர்தல்

2024 எம்பி தேர்தலில் பாஜகவுக்கு மாற்று சக்தியாக எதிர்கட்சிகளை அணி திரட்டும் அசைன்மெண்ட் பிரசாந்த் கிஷோருக்கு தரப்பட்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்ததையும் இங்கு குறிப்பிட வேண்டி உள்ளது... பாஜகவுக்கு அதாவது மோடிக்கு எதிராக பொதுவான ஒரு வேட்பாளரை களமிறக்குவது குறித்த பரிசீலனையையும் பிரசாந்த் கிஷோர் தொடங்கியிருப்பதாக தெரிகிறது..

 முக ஸ்டாலின்

முக ஸ்டாலின்

ஏற்கனவே மம்தாவின் நம்பிக்கையை பிகே பெற்றுள்ள நிலையில், நிச்சயம் திமுகவின் ஆதரவையும் பிகே பெறுவது எளிதானதே.. ஏனெனில், ஆரம்பம் முதலே, "ஆண்ட்டி மோடி" என்ற ரீதியில் பல்வேறு விஷயங்களை கையில் எடுத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.. அது ஜிஎஸ்டி சம்பந்தமாக 12 மாநில முதல்வர்களுக்கும் லெட்டர் எழுதியதாகட்டும், இலவச தடுப்பூசி, நீட் பிரச்சனைகளுக்கு கடிதம் எழுதியதாகட்டும், அனைத்திலுமே ஸ்டாலினின் பல்ஸ் அறிய முடிகிறது.

திமுக

திமுக

அதாவது மாநிலங்கள் எந்தெந்த விஷயங்களில் சம்பந்தப்பட்டுள்ளதோ, அந்த பிரச்சனைகள் தொடர்பாக தன்னிடம் ஒருங்கிணைத்து கொண்டு, மத்திய அரசுக்கு வலியுறுத்தும் போக்கைதான் ஸ்டாலின் நடத்தி வருகிறார்.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், மத்திய அரசுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, அதன்மூலம் தன்னை தேசிய லெவலுக்கு உயர்த்தும் முயற்சியாகவே இது பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிகேவின் பிளானும் இதில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 சவால்கள்

சவால்கள்

ஆக மொத்தம், பாஜகவுக்கான எதிர்ப்பு அரசியல் வலுவாகி கொண்டிருக்கிறது என்பதும், இப்படி பிராந்திய கட்சிகளை ஒன்றிணைப்பதும் பாஜகவுக்கு நிச்சயம் சவாலாக இருக்கும் என்பது சந்தேகமில்லை.. ஆனால் அதேசமயம், இதற்கு முன்பும் இப்படித்தான் அன்று அனைத்து பிராந்திய கட்சிகளையும் இணைத்துதான், இந்திரா காந்தியே தோல்வியை தழுவினார் என்பதையும் மறுப்பதற்கில்லை.. இனி, பாஜகவுக்கு எதிராக திரளும் அணி வெற்றி பெறுமா? பார்ப்போம்.

English summary
Prasanth Kishorers master sketch against BJP Gov
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X