கெத்து தான்.. தமிழக போலீசாருக்கு ஜனாதிபதி கொடுத்த ‘கொடி’! தென் மாநிலங்ளில் ஒரே மாநிலம்! சூப்பர்ல!
சென்னை : தென் மாநிலங்களில் முதன்முறையாக குடியரசுத் தலைவரின் கொடி தமிழக காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கொடியை ஒப்படைத்தார்.
Recommended Video
இந்திய அளவில் சிறந்து செயல்படும் காவல்துறையினருக்கு ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்படுகிறது.
இந்திய அளவில் இதுவரை 10 மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறையினருக்குத் தான் இதுவரை இந்த கொடி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சிறப்புக் கொடி
தென் மாநிலங்களைப் பொருத்தவரை இதுவரை எந்த ஒரு மாநிலத்துக்கும் ஜனாதிபதியின் சிறப்புக் கொடி வழங்கப்பட்டதில்லை. இந்நிலையில் தான் தமிழக காவல்துறையினருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது.

முதல் மாநிலம்
தென்மாநிலங்களில் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் தமிழகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு, ஜனாதிபதியின் சிறப்பு கவுரவ கொடியை தமிழக போலீசாருக்கு வழகினார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு கவுரவ கொடியை துணை ஜனாதிபதி, முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரம்மாண்ட ஏற்பாடு
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக காவல்துறை சார்பில் பிரம்மாண்டமாக செய்திருந்த நிலையில், பாதுகாப்புக்கு 3 ஆயிரம் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். குடியரசு தலைவரின் கொடி வழங்கல் நிகழ்ச்சிக்கு பிறகு ஓரிரு மாதங்களில் காவல் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர்கள் வரை தங்களது சீருடையில் குடியரசு தலைவரின் கொடியை கட்டாயம் அணியும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications