சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வொர்க் ஃபிரம் ஹோம்.. எப்படி சமாளிக்கிறது? மன நல மருத்துவர் சுபா சார்ல்ஸின் அசத்தல் ஆலோசனைகள்!

Google Oneindia Tamil News

சென்னை: வொர்க் ஃபிரம் ஹோம் செய்பவர்கள் எப்படி சமாளிப்பது என்பது குறித்து மனநல மருத்துவரான சுபா சார்ல்ஸ் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

Recommended Video

    Work From Home செய்பவர்கள் எப்படி சமாளிப்பது? |குழந்தைகள் தொல்லையா? |புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா?

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய சொல்லியிருக்கிறது.

    இதனால் இதுவரை அலுவலகம் சென்று வேலை பார்த்தவர்கள் தற்போது வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகிறார்கள். இப்படி வீட்டில் இருந்து வேலை பார்க்கும் போது கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மன நல மருத்துவரான சுபா சார்ல்ஸ் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

    கறுப்பு நிறத்தில் நுரையீரல்

    கறுப்பு நிறத்தில் நுரையீரல்

    அதன்படி புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அதில் இருந்து விடுபட வழி முறைகளை கூறியிருக்கிறார். புகைப்பிடிப்பதால் கார்பன் துகல்கள் முழுவதும் நுரையீரலில் படிந்து விடும். பொதுவாக எல்லோருடைய நுரையீரலும் பிங்க் நிறத்தில் இருக்கும். ஆனால் புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல் கறுப்பு நிறத்தில் இருக்கும். இதனால் கொரோனா போன்ற வைரஸ்கள் தாக்கும் போது உங்களின் நுரையீரலால் எதிர்த்து போராட முடியாது.

    மூச்சுப் பயிற்சி

    மூச்சுப் பயிற்சி

    ஒரு கட்டத்துக்கு மேல் நுரையீரலில் உள்ள செல்களே உங்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக மாறிவிடும். இதனால் நிமோனியா போன்ற காய்ச்சல் எளிதில் தாக்கிவிடும். இந்த நேரத்தில் மரம் செடி கொடுகளுக்கு அருகே அமர்ந்து ஆக்ஸிஜனை சுவாசியுங்கள். புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட இது ஒரு அற்புதமான நேரம். நல்ல மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.

    வொர்க் ஃபிரம் ஹோம்

    வொர்க் ஃபிரம் ஹோம்

    வொர்க் ஃபிரம் ஹோம் செய்பவர்கள் எப்படி சமாளிப்பது? என்ற கேள்விக்கும் சுபா சார்ல்ஸ் பதிலளித்துள்ளார். இப்போது பலரும் வீட்டில் இருந்தப்படியே வேலை செய்கிறார்கள். இனிமேல் இப்படிதான் இருக்கும். சோஷியல் டிஸ்டன்ஸிங் ரொம்ப முக்கியம். இனிமேல் நெருக்கமாக அமர்ந்து வேலை செய்ய முடியாது.

    பழக வேண்டும்

    பழக வேண்டும்

    சில வீட்டில் கணவன் மனைவி இருவருமே வொர்க் ஃபிரம் ஹோமாக இருப்பார்கள். அவர்கள் அந்த ஒழுங்கை கடைப்பிடிக்க பழக வேண்டும். 16 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர்கிறோம். நான் எல்லாம் ரத்தத்தை பார்த்ததும் மயங்கி விழுந்திருக்கிறேன். பின்னர் பெரும் பெரும் சர்ஜரி செய்ய பழக்கி விடுகிறார்கள்.

    ஹேபிட் ஃபார்மிங்

    ஹேபிட் ஃபார்மிங்

    எல்லாம் ட்ரெயினிங் தான். நாங்கள் ஆறரை ஆண்டுகளில் அதனை பழகினோம். இப்போது ஐந்தரை ஆண்டுகளாக ஆக்கிவிட்டார்கள். எல்லாமே ட்ரெயினிங்தான். ஹேபிட் ஃபார்மிங்... ஹேபிட் ஃபார்மிங் என்பது காலையில் இத்தனை மணிக்கு எழும்புவது.. அது எத்தனை மணியாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

    டிஃபால்ட்டாகி விடும்

    டிஃபால்ட்டாகி விடும்

    சூரியன் உதித்து மறைவதோடு உங்கள் உடம்பு சுற்றினால் நல்லது. ஆனால் நான் இரவு நேரத்தில்தான் வேலை செய்வேன் என்பவர்கள், அதற்கும் ஒரு ரொட்டினை செட் செய்ய வேண்டும். அதனை ஹேபிட்டாக்க வேண்டும். அப்படி செய்யும் போது அது டிஃபால்ட்டாகி விடும். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்த பிறகு என்ன செய்யலாம்? பல் விலக்கலாமா வேண்டாமா? குளிக்கலாமா வேண்டாமா என யோசித்து யோசித்து செய்தால் நீங்கள் வாழ்க்கையில் சாதிக்க முடியாது.

    ஆசீர்வாதம் தான்

    ஆசீர்வாதம் தான்

    காலையில் இத்தனை மணிக்கு எழும்புவேன், இத்தனை மணிக்கு குளிப்பேன், இந்த உடையை உடுத்துவேன் என நீங்கள் ரொட்டினாக செட் செய்து கொண்டால் உங்கள் குழந்தைகள் கூட உங்களை தொல்லை செய்ய மாட்டார்கள். பெண்களுக்கு வொர்க்கிங் ஃபிரம் ஹோம் என்பது ஆசீர்வாதம்தான். ஆண்களுக்கும் வொர்க்கிங் ஃபிரம் ஹோம் ஆசிர்வதிக்கப்பட்டதுதான்.

    தவறு இல்லை..

    தவறு இல்லை..

    யாரும் யாருக்கும் அடிமை இல்லை கணவன் மனைவி இணைந்து செயல்படலாம். குழந்தைகளுக்கு எப்போதும் செல்போனை கொடுக்க வேண்டாம். அவர்களுக்கு ஒரு டைம் கொடுங்கள். இந்த நேரத்தில் ரொம்ப சட்ட திட்டங்களை போடாதீர்கள். துள்ளி திரிந்த குழந்தைகள் உடலையும் மனதையும் சுறுக்கி வீட்டில் இருக்கும் போது செல்போனை பார்ப்பதில் ஒன்றும் தவறு இல்லை. இவ்வாறு கூறியிருக்கிறார் மன நல மருத்துவர், டாக்டர் சுபா சார்ல்ஸ்.

    English summary
    Psychiatrist Subha Charles gives advise how to set for work from home. She also gives ideas to give up smoking habbit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X