பிடிஆர் அன்று சொன்ன 'ஸ்டோக்'.. மக்கள் மீது விழுந்த பெரும் சுமை.. காரணம் மத்திய அரசு !
சென்னை: மத்திய அரசு கலால் வரியை கடந்த ஆண்டு பெட்ரோல் டீசல் மீதான விலையை தாருமாறாக உயர்த்திய போது தமிழகத்தின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் அன்று சில விஷயங்களை கூறி கடுமையாக எதிர்த்தார்.
Recommended Video
அவர் சொன்ன விஷயம் ஸ்டோக்.. அதாவது ஏதேனும் எதிர்பாராத முடக்கம் நம்மை நோக்கி திடீரென வரும் போது, அரசும் சரி, மக்களும் சரி கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக மக்களால் தாங்க முடியாத அளவிற்கு பாதிப்பு வரும் என்றார்.
பிடிஆர் சொன்னபடியே கொரோனா 2வது அலை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற பெரிய ஸ்டோக்குகள் நம்மை தாக்கி உள்ளன. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் உள்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

கலால் வரி
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது மத்திய அரசு, அதன் பலனை மக்களுக்கு அளிக்காமல் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோல்,டீசலுக் உண்டா கலால் வரியை பல முறை உயர்த்தியது. இதனால் சர்வதேச சந்தையில் குறையும் போது, இந்தியாவிலும் குறைந்திருக்க வேண்டிய பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.

பெட்ரோல் வரி
கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூபாய் 32.98 ஆகவும், டீசலில் ரூபாய் 31.83 ஆகவும் உயர்த்தப்பட்டிருந்தது. அதாவது ஆறு வருடங்களில் டீசலில் 820 சதவிகிதமும், பெட்ரோலில் 258 சதவிகிதமும் கலால் வரி விதிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் 19 லட்சம் கோடி ரூபாயை கலால் வரியாக மட்டுமே மத்திய அரசு ஆறு வருடங்களில் (கடந்த ஆண்டு நிலவரப்படி) மக்களிடம் வசூலித்தாக கூறப்பட்டது

பெரிய ஸ்டோக்குகள்
இந்நிலையில் பிடிஆர் பழனிவேல் ராஜன், பெட்ரோல்,டீசல் மீதான் கலால் வரி உயர்த்தப்பட்ட போது, சில விஷயங்களை கூறி மத்திய அரசின் முடிவை கடுமையாக எதிர்த்தார். அதாவது திடீரென அரபு நாடுகளில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலோ அல்லது வேறு ஏதேனும் இயற்கை பேரிடர் உள்ளிட்ட பெரிய ஸ்டோக்குகள் தாக்கினால் அப்போது விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றார்.

பெட்ரோல் விலை
பிடிஆர் பழனிவேல் ராஜன் கூறியது போலவே அடுத்தடுத்து பெரிய ஸ்டோக்குகள் நம்மை தாக்கி உள்ளது. கொரோனா இரண்டாவது அலை மோசமாக தாக்கி மக்களை திணறவைத்துள்ளது. மறுபுறம் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தொட்டுள்ளது. அதாவது வெறும் ஒரே ஆண்டில் கிட்டத்தட்டட லிட்டருக்கு 25 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. டீசல் விலையும் 95 ரூபாய்க்கு நெருங்கி உள்ளது,

பேருந்து கட்டணம்
பெட்ரோல் டீசல் விலை தாருமறாக உயர்ந்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. ஏனெனில் சரக்குகள் லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலமே பல இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதால் அதற்கான எரிபொருள் கட்டணம் உயர்வதால் அது மக்களின் தலையில் விழுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணம் உயரும் அபாயமும் உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications