சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. கையில் பூங்கொத்துடன் பிடிஆர்.. நடந்த சந்திப்பு
சென்னை: சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்தார். சென்னை வந்த நிர்மலா சீதாராமனுக்கு பூங்கொடுத்து கொடுத்து வரவேற்ற பிடிஆர், மரியாதை நிமர்த்தமாக சந்தித்து பேசினார் . ந்த சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.
சென்னையில் உள்ள வருமான வரி அலுவலக வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்காக 65 கோடி ரூபாய் செலவில் 243.48 சதுர மீட்டர் பரப்பளவில் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.
சிகரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த குடியிருப்பு வளாகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை மாலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வருவாய் செயலர் தருண் பஜாஜ், மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் மொஹபத்ரா, வருமான வரித்துறை தலைமை ஆணையர் டி. சி. பட்வாரி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வருமான வரித்துறை
முன்னதாக இன்று காலை சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய மறைமுக மற்றும் நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதேபோல வருமான வரித்துறை அதிகாரிகளுடன் மதியம் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின்னர் மாலையில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கான அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்தார்.

சந்திப்பு
இதனிடையே சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை நிமர்த்தமாக சந்தித்து பேசினார். அப்போது பிடிஆர், நிர்மலா சீதாராமனுக்கு பூங்கொடுத்து வரவேற்றார். இந்த சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.

பெட்ரோல் டீசல் விலை
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை விவகாரம், பெட்ரோல் டீசல் விலை விவகாரத்தில் மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருபவர் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அவர் இன்று சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

ஆலோசனை
இரண்டு நாள் பயணமாக தமிழகம் மற்றும் தெலுங்கானாவிற்கு வந்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத் செல்கிறார். அங்கு மத்திய மறைமுக மற்றும் நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அதேபோல் வருமான வரித்துறை அதிகாரிகளுடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications