பின்தங்கிய ஓபிஎஸ்.. விவேகமாக முந்தி முதல் வெற்றி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி.. ‛புரட்சி பாரதம்’ ஆதரவு!
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ பன்னீர் செல்வம் தரப்பும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் இருதரப்பினரும் கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு கோரி வருகின்றனர். அந்த வகையில் ஓ பன்னீர் செல்வத்தை முந்தி எடப்பாடி பழனிச்சாமி அணி செயல்பட்டு வருவதோடு, முதல் வெற்றியையும் பெற்றுள்ளது. அதன்படி எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி காலமானார். இந்த தொகுதிக்கு வரும் 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
இன்னும் சில நாட்களில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் திமுக சார்பில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் போட்டி
காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு களமிறங்க உள்ளது. இதுபற்றி அறிந்த ஓ பன்னீர் செல்வம் தன் தரப்பிலும் வேட்பாளர் போட்டியிட உள்ளார் என இன்று அதிரடியாக கூறினார். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தனித்தனியாக போட்டியிட உள்ளனர். இருவரும் இரட்டை சிலை சின்னத்துக்கு உரிமை கோரினால் அது முடக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஆதரவு கோரும் அணியினர்
இந்நிலையில் தான் இன்று காலை பேட்டியளித்த ஓ பன்னீர் செல்வம் பாமக, பாஜக, தமாக மற்றும் கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு கோரப்படும் என அறிவித்தார். உடனடியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசனை ஓ பன்னீர் செல்வம் சந்தித்து ஆதரவு கேட்டார். கடந்த முறை இந்த தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் போட்டியிட்ட வேட்பாளர் 2ம் இடம் பிடித்தார். தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என நினைத்த நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அவரோடு பேச்சுவார்த்தை நடத்தி ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்க திட்டமிட்டுள்ளார். இத்தகைய சூழலில் தான் இன்று எடப்பாடி பழனிச்சாமி, ஜிகே வாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.

புரட்சி பாரதம் தலைவருடன் சந்திப்பு
இதை பார்த்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உடனடியாக செயல்பாட்டை தீவிரப்படுத்தியது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டு புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியை சந்தித்தது. அதிமுக சார்பில் கேபி முனுசாமி, தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் பூவை ஜெகன் மூர்த்தியை சந்தித்து ஆதரவு கோரினார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு
இந்த சந்திப்புக்கு பிறகு புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி கூறுகையில், ‛‛ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு அளிக்க உள்ளோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு முழு ஆதரவு அளித்து தேர்தல் பணியில் ஈடுபடுவோம். ஓ பன்னீர் செல்வம் தரப்பில் இருந்தும் ஆதரவு கேட்டனர். மாலை வருவதாக கூறினார்கள். ஓ பன்னீர் செல்வம் நேரிடையாக போட்டியிடுவது பற்றி எனக்கு தெரியாது'' என்றார்.

அண்ணாமலையுடன் சந்திப்பு
இதையடுத்து இன்று மாலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர். அதன்பிறகு ஓ பன்னீர் செல்வம் தரப்பும் பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர். இருப்பினும் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது உடனடியாக அறிவிக்கப்படவில்லை. இதனால் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைதேர்தல் தொடர்பான எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோரின் நடவடிக்கைகள் தொடர்ந்து அரசியல் களத்தை ஹாட்டாகவே வைத்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications