உலகக்கோப்பை அர்ஜென்டினாவுக்குதான்.. ஆனால், நிஜ வெற்றி கத்தாருக்கே! தடைகளை மீறி சாதனை! இவ்வளவு லாபமா?
சென்னை: பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவின் வெற்றியை உலகமே கொண்டாடி வருகிறது. அதே நேரம் பல்வேறு எதிர்ப்புகள், விமர்சனங்களை கடந்து இதுவரை நடைபெற்றதிலேயே பிரம்மாண்டமான சிறந்த உலகக்கோப்பை தொடரை நடத்தி முடித்து உள்ளது கத்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு பிபா குழுமம் 2022 உலகக்கோப்பை தொடரை கத்தாரில் நடத்த ஒப்பந்தம் செய்தது. கால்பந்தில் அதிகளவு சாதிக்காத, பெரிய கால்பந்து மைதானங்கள், போதிய உள்கட்டமைப்புகள் இல்லாத கத்தாரில் எப்படி இப்படிப்பட்ட தொடரை நடத்த முடியும் என பலரும் கேள்வி எழுப்பினர்.
30 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட கத்தாரில் தங்கும் விடுதிகளும் போக்குவரத்து வசதிகளும் மற்ற அரபு நாடுகளை ஒப்பிடுகையில் குறைவு என்றே பேச்சு அடிபட்டது. எனவே 12 ஆண்டுகளில் கத்தாரால் எப்படி இந்த குறைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்ற சந்தேகம் எழுந்தது.

கடும் எதிர்ப்பு
1963 ஆம் ஆண்டு பிபாவின் அங்கீகாரத்தை பெற்ற கத்தார், இதற்கு முன் ஒருமுறைக்கூட உலகக்கோப்பை கால்பந்து தொடரில் விளையாட தகுதி பெற்றது இல்லை. பல பெரிய மேற்கத்திய வல்லரசு நாடுகள், கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கும் நாடுகள் இத்தொடரை நடத்த போட்டிப்போட்ட நிலையில், கத்தாரிடம்போய் கால்பந்து உலகக்கோப்பையை நடத்தும் பொறுப்பை வழங்குவதா என பலரும் பிபாவின் முடிவுக்கு எதிராக இருந்தனர்.

உள்கட்டமைப்பு பணிகள்
ஆனால், அனைத்து எதிர்ப்புகளையும் மீறி தனது நேர்த்தியான திட்டமிடலாலும், செயலாலும் அனைவருக்கும் பதிலடியை கொடுத்தது கத்தார். 8 கால்பந்து மைதானங்கள், நெடுஞ்சாலைகள், நட்சத்திர விடுதிகள், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் சேவை, சுரங்க பாதைகள், கால்பந்து ரசிகர்கள் தங்குவதற்கென விளையாட்டு நகரங்கள், மேம்படுத்தப்பட்ட சாலைகள் என ஏராளமான உள்கட்டமைப்புகளை அமைத்து நாட்டையே மாற்றி இருக்கிறது கத்தார் அரசு.

அதிக செலவில் நடைபெற்ற உலகக்கோப்பை
இதற்காக கத்தார் செலவு செய்த தொகையை கேட்டால் தலையே சுற்றிவிடும். ஆம், 220 பில்லியன் டாலர்களை அந்நாட்டு அரசு இதற்காக செலவிட்டு உள்ளது. போட்டி தொடங்கியவுடன் அங்கு காண வந்த ரசிகர்கள் கத்தாரின் இந்த பெரும் மாற்றத்தை வியந்து பாராட்டினர். கால்பந்து வரலாற்றிலேயே அதிக செலவில் நடத்தப்படும் கால்பந்து உலகக்கோப்பை தொடர் இது, என்ற பெருமையை கத்தார் உலகக்கோப்பை பெற்றது.

தொழிலாளர்கள் மரணம்
இதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்ட கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மனித உரிமை அமைப்புகள் விமர்சனங்கள் முன்வைக்கத்தன. அதே நேரம் இந்த உலகக்கோப்பை தொடரை நடத்த வேண்டும் என்பதற்காக இஸ்ரேல் எதிர்ப்பிலிருந்தும் கத்தார் பின்வாங்கவில்லை. இஸ்ரேல் ஒரு நாடாக அங்கீகரிக்காத கத்தார், அதன் பெயரை முன்பதிவு இணையதளத்தில் சேர்க்காமல் பாலஸ்தீன் என்று குறிப்பிட்டு இருந்ததற்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்தது.

பிபாவுக்கு அழுத்தம்
அதேபோல் எல்ஜிபிடி தடை, மதுபானத்துக்கு தடை என கத்தார் தங்கள் நாட்டு கொள்கையில் உறுதியாக இருந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதனால் உலகக்கோப்பை தொடங்குவதற்கு கடைசி சில நாட்கள் முன்பு வரை தொடரை வேறு நாட்டுக்கு இடமாற்றம் செய்திட வேண்டும் என பிபாவுக்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

வதந்திகள்
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இந்த தொடரை தொடங்கி நடத்தியது கத்தார். கடந்த மாதம் இந்த தொடர் தொடங்கியதில் இருந்தே இது குறித்து பல்வேறு வதந்திகளும் சமூக வலைதளங்களில் சுழன்றுகொண்டு இருந்தன. ஆனால், அனைத்து தடைகளையும் மீறி இதை வெற்றிகரமாக நடத்தி முடித்து தங்களின் ஆற்றலை கத்தார் காட்டி உள்ளது.

தொட்டதெல்லாம் பிரம்மாண்டம்
தொடக்க நாள் முதல் இறுதிப்போட்டி வரை பலரும் எதிர்பார்க்காத பிரம்மாண்டங்களை கத்தார் இந்த உலகக்கோப்பை தொடருக்காக செய்தது. நேற்றைய இறுதிப்போட்டியில் வென்ற மெஸ்ஸிக்கு அரபு அங்கியை அணிவித்து மகிழ்ந்தது தொடங்கி, கண்கவர் வாண வேடிக்கை வரை தொட்டதெல்லாம் பிரம்மாண்டமாக இருந்தது.

மதுபானம் கொண்டாட்டம் இல்லை
அதேபோல் மதுபானத்துக்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாக பிபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வென்ற அர்ஜெண்டினா சாம்பெயின் எனப்படும் மதுவை பீய்ச்சி அடித்து நடைபெறும் கொண்டாட்டம் இல்லாமலேயே வெற்றியை கொண்டாடியது. மதுபானம் இல்லாமல் நடைபெற்ற முதல் உலகக்கோப்பை இறுதிப்போட்டி வெற்றிக் கொண்டாட்டம் இதுவாகவே இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது.

கத்தாரின் உபசரப்பு
இந்த விமர்சனங்களை கடந்து வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு கத்தார் அரசு மற்றும் மக்கள் அளித்த வரவேற்பை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர். வளைகுடாவில் ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய நாடுகளே சக்தி வாய்ந்த மற்றும் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் நாடுகள் என்ற பெயரை பெற்று இருந்தன. இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரை நடத்தி வளைகுடாவில் தன்னையும் வலுவான சக்தியாக நிலைநிறுத்தி உள்ளது கத்தார்.

சுற்றுலா துறை
இதன் மூலம் ஏற்கனவே ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்த்து இருக்கும் கத்தார், இந்த உலகக்கோப்பை தொடர் பெற்ற வெற்றியின் காரணமாக தங்கள் நாட்டில் முதலீடுகளும் அதிகரித்து சுற்றுலா துறை மற்றும் தொழில்துறை வளர்ச்சி பெருகும் என நம்புகிறது. இதற்கான அறிகுறிகள் இப்போதே தெரியத் தொடங்கிவிட்டன.

கலாச்சார, மத பிரச்சாரம்
இதை கடந்து பிபா உலகக்கோப்பை தொடரின் மூலம் தங்கள் நாட்டின் கலாச்சாரத்தை ஒவ்வொரு அசைவிலும் பதிவு செய்துகொண்டே இருந்தது கத்தார். உலகக்கோப்பை தொடக்க விழாவில் குர்ஆன் வசனங்களை ஓதியது முதல் வெளிநாட்டவர்கள் அதிகம் செல்லும் இடங்களில் எல்லாம் குர்ஆன் வசனங்களை அவர்கள் வாசிக்கும் படி வைத்து இஸ்லாம் குறித்த புரிதலை ஏற்படுத்த முயன்றது. அரபு நாட்டு உடையை கொண்ட பொம்மையை வடிவமைத்து ஆங்காங்கே வைத்தது, மெஸ்ஸிக்கே அரபு நாட்டு அங்கியை அணிவித்தது வரை அனைத்தையுமே இந்த 220 பில்லியன் டாலர் என்ற பெரும் தொகையை முதலீடு செய்து நடத்திவிட்டது கத்தார்.

சர்வதேச நட்புறவு
ஐரோப்பாவை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள், வீரர்கள் கால்பந்து விளையாடவும், பார்க்கவும் உகந்த இடமாக தங்கள் நாட்டை கத்தார் மாற்றி இருப்பதாக பிரபல விளையாட்டு பத்திரிகையாளர் நிக் மில்லர் தெரிவித்து உள்ளார். அதேபோல் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உரசல் போக்கை கடைபிடித்து வந்த கத்தார், இந்த தொடரின் மூலம் பல உலக நாடுகளின் நட்புணர்வை ஈர்த்துள்ளது.

கத்தாரின் மற்றொரு முகம்
கத்தார் என்றாலே பாலைவனம், மோசமான வானிலை, கடும் வெப்பம் என புரிந்து வைத்திருந்த வெளிநாட்டு மக்களிடம், பலருக்கும் தெரியாத தங்களின் மற்றொரு முகத்தை காட்டி இருக்கிறது அந்நாட்டு அரசு. கத்தாரிலும் குளிர் காலம் உள்ளது, அங்கு 20 டிகிரிக்கும் குறைவாக குளிரும் இருக்கும் என இதன் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்து உள்ளது. தற்போது இந்த உலகக்கோப்பை நடைபெற்ற காலத்தில் 20 முதக் 26 டிகிரி வரை மட்டுமே அங்கு வெப்பம் நிலவியது.

பெருகிய உள்நாட்டு உற்பத்தி
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விசயம் என்னவென்றால், கத்தார் கடந்த 2010 ஆண்டு உலகக்கோப்பையை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை பெற்றதில் இருந்தே அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது பன்மடங்கு உயரத் தொடங்கியது. ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் கடந்த 12 ஆண்டுகளில் கத்தாரில் முதலீடு செய்து இருக்கின்றன. இதன் மூலம் மிகப்பெரிய அளவில் வருவாய் ஈட்டி இருக்கிறது கத்தார்.

பொருளாதார வளர்ச்சி
உலகக்கோப்பையின் காரணமாக 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் கத்தாரின் பொருளாதார வளர்ச்சி என்பது 3.4 சதவீதம் அதிகரிக்கும் என்றும் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. அதே நேரம் 2024 ஆம் ஆண்டுக்கு பின் இந்த வளர்ச்சி 1.4 சதவீதமாக குறையும் எனவும் கூறி இருக்கிறது. குறிப்பாக உலகக்கோப்பையின் மூலம் மிகச்சிறப்பான நவீன உள்கட்டமைப்பை கொண்ட நாடாக தன்னை உலக அரங்கில் நிலை நிறுத்தி உள்ளது கத்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications