ராகு கேது பெயர்ச்சி 2022: இந்த ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது
ராகு கேது பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்மையையும் சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பையும் தரும். எந்த ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி நன்மையை தரப்போகிறது என்று பார்க்கலாம்.
சென்னை: ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷத்திற்கும் விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகப்போகிறார். செவ்வாய் போல ராகுவும் சுக்கிரன் போல கேதுவும் செயல்படுவார்கள். இந்த கிரகப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் யோகமும் பண வரவும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
ராகு பகவானைப் போல அள்ளிக்கொடுப்பவர் யாருமில்லை. கேதுவைப் போல தீயவைகளை கெடுப்பவர் யாருமில்லை எனவேதான் ராகுவைப்போல கொடுப்பார் இல்லை கேதுவைப்போல கெடுப்பார் இல்லை என்பார்கள். ராகு யோககாரகன் கேது மோட்ச காரகன் இருவரும் எதிர் எதிர் திசையில் இடப்பெயர்ச்சியாகின்றனர்.
இந்த இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்பதால் இவர்களுக்கு சொந்த வீடு இல்லை. தாங்கள் இருக்கும் வீட்டின் அமைப்பைப் பொருத்து அந்த வீட்டு அதிபதிகளைப் போல செயல்படுவார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு யோகங்களும் நன்மைகளும் கிடைக்கப்போகிறது யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் என்று பார்க்கலாம்.

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராகுவினால் ஏற்பட்ட சிக்கல்கள் மன குழப்பங்கள் நீங்கப்போகிறது. 12ஆம் வீட்டில் ராகு மறையப்போகிறார். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடிடும் ராஜயோகம் என்ற அமைப்பின் படி நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. வெளிநாடு செல்லும் யோகமும் அதிர்ஷ்டமும் கிடைக்கப்போகிறது. கேது களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து குடும்பத்தில் நிம்மதியின்மையை ஏற்படுத்தி வந்தார். நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு மன நிம்மதியும் குடும்பத்தில் சந்தோஷமும் அதிகரிக்கப்போகிறது.

மிதுனம்
புதன்பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். அஷ்டம சனியால் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். லாப ராகு மனதில் புதிய உற்சாகத்தை தரப்போகிறார். தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபத்தை கொடுப்பார். உங்கள் ராசியில் ராகு சரியான நிலையில் இருந்தால் உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மன மகிழ்ச்சியை அதிகரிக்கக் கூடியதாக இருக்கப் போகிறது. மிகப்பெரிய மாற்றத்தை தரப்போகிறது.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மராசிக்காரர்களுக்கு ராகு பாக்ய ஸ்தானமான ஒன்பதாவது வீட்டிற்கு வரப்போகிறார். சொத்து சேர்க்கை அதிகரிக்கும். திடீர் திருப்பங்கள் ஏற்படும். சிக்கல்களில் இருந்து மீண்டு வந்து ஜெயிக்கப்போகிறீர்கள். உங்களுடைய ராசிக்கு மூன்றாவது வீட்டிற்கு கேது வரப்போகிறார். தைரியம்தன்னம்பிக்கை அதிகரிக்கும் எடுத்த காரியங்களில் வெற்றி பெறப்போகிறீர்கள்.

தனுசு
குருபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசுராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு ராகு வரப்போகிறார். பணப்பிரச்சினை நீங்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் முடிவுக்கு வரும். போட்டி பொறாமைகள் விலகும் காலம் வரப்போகிறது. லாப ஸ்தானத்திற்கு கேது செல்லப்போகிறார். செய்யும் வியாபாரம் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் இருந்த மந்தத்தன்மை நீங்கும்.

விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே நீங்கள் பட்ட வலிகள் வேதனைகள் முடிவுக்கு வரப்போகிறது. வேதனையோடு இருப்பவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி மிகப்பெரிய வெற்றியை தரப்போகிறது. ஜென்ம கேது மன ரீதியாக நிறைய வலிகளை கொடுத்து வந்தார். இனி புதிய தெம்பும் தைரியமும் கிடைக்கும். ஆறாம் வீட்டிற்கு வரப்போகும் ராகுவினால் கடன் பிரச்சினை நீங்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

கும்பம்
சனிபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, உங்களுடைய ராசிக்கு மூன்றாவது வீட்டிற்கு ராகு வருவதால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஏழரை சனியால் தொழிலில் ஏற்பட்ட மந்த நிலை மாறும். பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகும் கேது அப்பா வழி சொத்துக்களை தேடித்தருவார். உறவினர்களிடம் இருந்த கசப்புணர்வு நீங்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications