Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு பம்பர் பரிசு.. கிலோமீட்டருக்கு இனி இவ்வளவு பணமா? முழு விபரம் உள்ளே

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு, குறிப்பாக ரயில்களை இயக்கும் ரன்னிங் ஸ்டாஃப் (Running Staff) எனப்படும் லோகோ பைலட்டுகள் மற்றும் கார்டுகளுக்கு ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கோரிக்கையை ஏற்று, ரயில்வே ஊழியர்களுக்கான பயணப்படி அல்லது Distance Allowance எனப்படும் தூரப்படியை அதிரடியாக உயர்த்தி ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

லோகோ பைலட்டுகள் மற்றும் கார்டுகளுக்கு பயணப்படி அல்லது Distance Allowance எனப்படும தூரப்படியை ரயில்வே வாரியம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

Railway Employees

இந்த அறிவிப்பானது ரயில்வே ஊழியர்களின் மாதாந்திர வருமானத்தில் கணிசமான உயர்வை ஏற்படுத்தும் என்பதால், நாடு முழுவதும் உள்ள ரயில்வே பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.. கோடைக்கால நெருக்கடியில் ரயில்களை இயக்கும் ஊழியர்களுக்கு இது ஒரு சிறந்த ஊக்கத்தொகையாகப் பார்க்கப்படுகிறது..

இந்த புதிய உத்தரவின்படி, ரயில்வே ஊழியர்கள் பயணிக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் வழங்கப்படும் அலவன்ஸ் விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.. இதற்கு முன்பு இருந்த பழைய விகிதங்களை விட, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விகிதங்கள் ஊழியர்களுக்குக் கூடுதல் லாபத்தைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, சரக்கு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களை இயக்கும் ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்தை கடக்கும்போது, அவர்களுக்கு வழங்கப்படும் படித் தொகையில் குறிப்பிடத்தக்க சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தொழிலாளர் சங்கங்கள் குஷியாக சொல்கின்றன.

குறிப்பாக, இரவு நேரப் பணி மற்றும் கூடுதல் நேரப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இந்த உயர்வு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

ரயில்வே வாரியம் எடுத்துள்ள இந்த முடிவானது, கடந்த ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஒட்டியே மேற்கொள்ளப்பட்டுள்ளது.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே அகவிலைப்படி (DA) உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது பயணப்படியும் உயர்த்தப்பட்டிருப்பது ஊழியர்களுக்கு டபுள் ஹேப்பியை தந்து கொண்டிருக்கிறது. காரணம், இதன் மூலம் ஒரு சாதாரண லோகோ பைலட் அல்லது கார்டு, மாதம் ஒன்றிற்கு சராசரியாகப் பல ஆயிரம் ரூபாயை தங்களின் கூடுதல் வருமானமாக பெற முடியும்.

அதுமட்டுமல்ல, இந்த தொகையானது அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என்பதால், பணவீக்கம் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் இதெல்லாம் ஒரு பெரிய நிதி ஆதாரமாகவே அவர்களுக்கு விளங்கும்.

மேலும் இந்த ஊதிய உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.. சில குறிப்பிட்ட பிரிவினருக்கு Arrears எனப்படும் நிலுவைத் தொகையுடன் சேர்த்து இந்தப் பணம் வழங்கப்பட உள்ளதால், ஏப்ரல் 1ம் தேதி தொடங்கும் புதிய நிதியாண்டில் ரயில்வே ஊழியர்களின் கைவசம் கூடுதல் பணம் புழங்கும்.

ரயில்வே துறையில் நிலவும் பணிப்பளுவை சமாளிக்கவும், ஊழியர்களை உற்சாகப்படுத்தவும் இத்தகைய சலுகைகள் மிக அவசியமானவை என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். எனவே பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்யும் ஊழியர்களுக்குக் கிடைக்கும் இந்த அங்கீகாரம், அவர்களின் பணித்திறனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதைய இந்த நடைமுறை மாற்றங்கள் குறித்த முழுமையான விவரங்களை ஊழியர்கள் தங்களின் அந்தந்த மண்டல அலுவலகங்களில் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் சர்ப்ரைஸ் காரணமாக, ரயில்வே துறையில் உள்ள மற்ற பிரிவுகளை சேர்ந்த ஊழியர்களும் தங்களுக்குரிய சலுகைகள் குறித்துப் பல எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கிறார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+