மழையுடன் “டாட்டா” சொல்லும் 2022.. தென் மாவட்டங்களில் 2 நாள் பெய்யுமாம்! லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா?
சென்னை: வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி கடந்த சில நாட்களுக்கு முன் வலுவிழந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கடந்த சில நாட்களாக வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது.
இதனால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில்
நல்ல மழை பெய்தது. இந்த நிலையில் அரபிக்கடலில் அருகே நேற்று முந்தினம் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது.

மழையும், வறண்ட வானிலையும்
இந்த நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட உள் தமிழக மாவட்டங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னையில் மழை பெய்யுமா?
டிசம்பர் 32 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மழை நிலவரம்
கடந்த 24 மணி நேரத்தில் ஊத்து (திருநெல்வேலி) 9, மாஞ்சோலை (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 6, நம்பியார் அணை (திருநெல்வேலி 5, கன்னடியன் அணைக்கட்டு (திருநெல்வேலி) 3 சென்டிமீட்டர் என்ற அளவில் மழை பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடியில் மழை
ராமநதி அணைப்பிரிவு (தென்காசி), நாலுமுக்கு (திருநெல்வேலி, பாபநாசம் (திருநெல்வேலி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) தலா 2, கடனா அணைப்பிரிவு (தென்காசி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), கயத்தாறு (தூத்துக்குடி), செங்கோட்டை (தென்காசி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), குண்டாறு அணை (தென்காசி), ஆயிக்குடி (தென்காசி) தலா 1." என்றார்.
-
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications