அரசியலில் ஈடுபடமாட்டேன்.. மக்கள் மன்றமும் கலைப்பு.. ரஜினிகாந்த் அதிரடி அறிக்கை
சென்னை: அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு ரசிகர் மன்றமாக செயல்படும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை வந்தார்.
இந்த நிலையில் அவர் இன்றைய தினம் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. இந்த சந்திப்பு நிகழ்ச்சி கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ரஜினி
இந்த நிலையில் ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்த ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்பது குறித்து மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கவுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அறிக்கை
ஆலோசனைக்கு பிறகு ரஜினிகாந்த் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன, நிலை என்ன என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.

எண்ணம் இல்லை
நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம். கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை.

ரசிகர் மன்றம்
வருங்காலத்தில் அரசியலில் ஈடுபட போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு சார்பு அணிகள் எதுவுமின்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications