சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இரட்டை இலை மாதிரியே.." திருப்தியடையாத ரஜினி.. தீவிர யோசனையில் தேர்தல் ஆணையம்

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்த் கட்சியின் பெயர், கட்சியின் சின்னம் பற்றி பல்வேறு தகவல்கள் இன்று காலை முதல் கொடி கட்டி பறக்கின்றன. மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சியுடன், ரஜினிகாந்துக்கு தொடர்புள்ளது என்று வெளியான செய்திகளால் பரபரத்து கிடக்கிறது தமிழக அரசியல்.

Recommended Video

    சென்னை: ரஜினியுடைதா மக்கள் சேவை கட்சி…? பதிவு முகவரியில் வெளியான திடீர் டுவிஸ்ட்!

    இதையடுத்து, ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், இந்த கட்சியின் பெயர் மற்றும் சின்னம் பற்றிய தகவல்களை மறுக்கவில்லை என்ற போதிலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை மக்கள் மன்றத்தினர் காத்திருக்கும்படி மட்டும் கேட்டுக் கொள்ளப்பட்டதால், இந்த யூகங்கள் இன்னும் அதிகரித்துள்ளன.

    இதுபற்றி தேர்தல் ஆணைய வட்டாரங்களிடம் பேசியபோது ஒரு புது தகவல் வெளியானது.

    ரஜினியின் கட்சியின் பெயர் இதுதானாம்.. சின்னம் என்ன தெரியுமா.. வெளியான பரபரப்பு தகவல்..!ரஜினியின் கட்சியின் பெயர் இதுதானாம்.. சின்னம் என்ன தெரியுமா.. வெளியான பரபரப்பு தகவல்..!

    மக்கள் சக்தி கழகம்

    மக்கள் சக்தி கழகம்

    அதாவது, மக்கள் சேவை கட்சி, என்ற பெயரில் புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சி கிடையாதாம். ஏற்கனவே, அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை பதிவு செய்த நபர், மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் அதை மாற்றம் செய்ய இரண்டரை மாதங்கள் முன்பு கோரிக்கை விடுத்து, அது தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் நடந்துள்ளது. இந்த கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    பாட்ஷா படம்

    பாட்ஷா படம்

    1995ஆம் ஆண்டில் வெளியான பாட்ஷா திரைப்படத்தில், ஆட்டோ ஓட்டுநராக நடித்திருப்பார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த்தின் திரை உலக வாழ்வில் மிகப்பெரிய ஹிட் திரைப்படம் பாட்ஷா. அதன் பிறகு அவரது மசாலா படங்களின் போக்கு மாறிப்போனது என்று சொல்லலாம். ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் ரஜினிகாந்தை கொண்டு சேர்த்ததில் மிக முக்கிய பங்கு வகித்தது அந்த படம். எப்படி, கர்நாடகாவில் ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியில், மறைந்த நடிகர் சங்கர்நாக் சென்று சேர்ந்தாரோ, அதேபோல பாட்ஷா திரைப்படம், ரஜினிகாந்தை சாமானியர்களிடம் கொண்டுசென்று சேர்த்தது. எனவே ஆட்டோ சின்னம் மிகவும் பொருத்தமானது என்று பல ரசிகர்கள் கருதுகிறார்கள்.

    ஹஸ்த முத்திரை சின்னம்

    ஹஸ்த முத்திரை சின்னம்

    இருப்பினும், ரஜினிகாந்த் விருப்பம் என்பது வேறு ஆக இருந்துள்ளது. அவர் விரும்பியது இரட்டை விரல் சின்னம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இதை ஹஸ்த முத்திரை என்றும் சொல்கிறார்கள். 2002ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படத்தில் இந்த முத்திரையை ரஜினிகாந்த் கதாபாத்திரம் பயன்படுத்தியிருக்கும். இமயமலையில் உள்ள பாபா தனக்கு வழிகாட்டி என்கிறார் ரஜினிகாந்த். எனவே, சென்டிமென்டாக இந்த பாபா முத்திரையை பயன்படுத்தினால் வெற்றி உறுதி என்று அவர் நம்புகிறார்.

    விரல் சின்னம் முக்கியம்

    விரல் சின்னம் முக்கியம்

    அதுமட்டுமல்ல.. ஆட்டோ ரிக்ஷா என்பது வருங்காலத்தில் நடைமுறையில் இருக்குமோ இல்லையோ என்பது தெரியவில்லை. உதாரணத்துக்கு, சைக்கிள் ரிக்ஷா இப்போது கிட்டத்தட்ட வழக்கொழிந்து போய்விட்டது. அதே போன்ற நிலை ஆட்டோரிக்ஷாவுக்கு ஏற்பட்டால் எதிர்காலத்தில் கட்சி சின்னத்தின் நிலைமை என்ன என்பது ரஜினிகாந்தை சுற்றியிருப்பவர்கள் கேள்வியாக இருக்கிறது.

    இரட்டை இலை மாதிரி இரட்டை விரல்

    இரட்டை இலை மாதிரி இரட்டை விரல்

    தமிழகத்தின் இருபெரும் கட்சிகள் திமுக மற்றும் அதிமுக. இதில், திமுக சின்னம் உதயசூரியன். அதிமுகவின் சின்னம் இரட்டை இலை. இரண்டும் இயற்கையுடன் தொடர்புடையது. இதற்கு மாற்றம் கிடையாது. இதே மாதிரிதான், இரட்டை விரல் என்றால், ஒரு பக்கம் சென்டிமெண்ட்.. மறுபக்கம் எப்போதும் மாற்றமில்லாத கைவிரல், போன்ற அறிவியல் காரணமும் இதன் பின்னணியில் இருக்கிறது.

    தேர்தல் ஆணையம் தயக்கம்

    தேர்தல் ஆணையம் தயக்கம்

    இருப்பினும், இரண்டு காரணங்களுக்காக, தேர்தல் ஆணையம் இந்த சின்னத்தை ஒதுக்கீடு செய்ய யோசிக்கின்றது. ஒன்று.. ஏற்கனவே இதே போன்ற கை சின்னத்தை காங்கிரஸ் கட்சி பயன்படுத்துகிறது. இரண்டு சின்னங்களுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பது முக்கியம் என்பதால் தேர்தல் ஆணையம் யோசிக்கிறது. மேலும், ஆன்மீகம் தொடர்புடையது என்றால் அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் அனுமதி கொடுப்பது கிடையாது.
    எனவேதான் யோசித்து வருகிறது தேர்தல் ஆணையம்.

    ரஜினிகாந்த் விருப்பம்

    ரஜினிகாந்த் விருப்பம்

    தேர்தல் ஆணையத்திற்கு யோசனைகள் பல இருந்தாலும், ரஜினிகாந்த்தின் முழு விருப்பமும் இரட்டை இலை பாணியில் இரட்டை விரல் என்கிறார்கள். எனவே, தேர்தல் ஆணையத்திடம் எப்படியாவது வேண்டுகோள் விடுத்து இரட்டை விரல் சின்னத்தைப் பெற்று விட வேண்டும் என்பதில், ரஜினி தரப்பு மிகத் தீவிரமாக இருக்கிறதாம். இப்போது வெளியாகியுள்ள ஆட்டோ சின்னம் என்பது ஒரு வேளை ரஜினிகாந்து விரும்பியது கிடைக்காவிட்டால் பயன்படுத்தக்கூடிய ஒரு பேக்-அப் சின்னமாக இருக்க கூடும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

    English summary
    Rajinikanth wants two finger pose symbol, for his political party, but election commission is understood to have denied the symbol as it appears resemblance to the Indian National Congress hand symbol.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X