ரம்ஜான் பண்டிகை இன்று வீடுகளிலேயே எளிமையாக கொண்டாட்டம் - குடும்பத்துடன் தொழுகை
கொரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே, ரம்ஜான் பண்டிகையை எளிமையாக கொண்டாடினர்.
சென்னை: ஈகைத்திருநாள் என போற்றப்படும் ரம்ஜான் பெருநாள் இன்று தமிழகம் முழுவதும் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனர். வீட்டின் மொட்டை மாடிகளிலும் தனிமனித இடைவெளியை பின்பற்றி, குடும்பத்தினருடன் தொழுகை செய்தனர்.
ரம்ஜான், ரமலான் பண்டிகை என்று சக மக்களால் அழைக்கப்படும் இந்தப் பண்டிகையை ஈதுல் ஃபித்ர் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் நாட்காட்டி சூரியனின் இயக்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும். 30வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
இஸ்லாமியர்கள் சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையிலேயே மாதங்களைக் கணக்கிடுவர். ரமலான் மாதம் இறைவனை நெருங்கவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் கருதுகின்றனர்.
இஸ்லாமிய நாள்காட்டியில் ஒன்பதாவது மாதமான ரமலானில் நோன்பு தொடங்குவார்கள். சந்திர உதயத்தைப் பொருத்து பிறை தென்படுவதைப் பொருத்தும் சில நாடுகளில் கால வேறுபாடுகளுடன் நோன்பு தொடங்கும்.
30 நாட்கள் நோன்பு இருந்து இறைவழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். முஸ்லிம்கள் அனைவருக்கும் நோன்பு கட்டாயம், நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டது போலவே உங்கள் மீதும் அது விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் தூய்மையுடையவர்கள் ஆகிறீர்கள் என்கிறது இஸ்லாமிய இறைவாக்கு.
வளைகுடா நாடுகளில் நேற்றைய தினம் ரம்ஜான் பண்டிகைக் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கேரளா, கன்னியாகுமரியிலும் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது.
சென்னை, மதுரை, திருச்சியில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களின் வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தினர். கோவையில் இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரான ஜாக் கமிட்டி சார்பில், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக, காலையிலேயே அவரவர் தங்களது வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனர். சிலர், வீட்டின் மொட்டை மாடிகளிலும் தனிமனித இடைவெளியை பின்பற்றி, குடும்பத்தினருடன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ரம்ஜான் பண்டிகை எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொலைபேசி மூலம் உறவினர்களிடம் பேசி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications