விறுவிறுப்படையும் ராமஜெயம் கொலை வழக்கு..உண்மை கண்டறியும் சோதனை..குற்றவாளி சிக்குவாரா?
சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரிசோதனை அறிக்கை இந்த மாத இறுதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும் தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அதிகாலை நடைபயிற்சிக்கு சென்றார்.

அப்போது அவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். காவல்துறையினர் அவரை தேடி வந்த நிலையில் கல்லணை ரோடு திருவளர்ச்சோலை பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. முள் கம்பிகளால் கை கால்கள் கட்டப்பட்டு வாயில் அழுக்குத்துணி திணிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார் ராமஜெயம்.
ராமஜெயத்தை கொன்றது யார்? எதற்காக இந்த கொடூர கொலை நடந்தது என முதலில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். எந்த துப்பும் கிடைக்காத நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எந்தவித துப்பும் துலங்கவில்லை. இதனையடுத்து வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. பத்து ஆண்டுகளாக கொலையாளிகளை கண்டு பிடிக்க முடியாத நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 6 மாதமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் இதுவரை 700 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் சந்தேகப்படும்படியான 13 பேரை அடையாளம் கண்டு அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர். இதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய அதிகாரிகள் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய தினம் திருச்சி தில்லை நகர் பகுதியில் மேற்கண்ட 13 பேரில் 5 பேரின் செல்போன் பயன்பாடு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் ராமஜெயம் கொலை நடப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு காரைக்காலில் அவர்கள் சந்தித்து பேசிய ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. இந்த நபர்களுக்கு ஜாபர் என்பவரது கொலை வழக்கிலும் தொடர்புள்ளது. எனவேதான் ராமஜெயம் கொலை வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றோம். மேலும் இந்த 5 பேருடன் மற்ற 8 பேருக்கும் தொடர்பு இருக்கின்றது. அந்த அடிப்படையில் தான் 13 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் கண்டிப்பாக துப்பு துலங்கும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். இந்த 13 பேரில் சண்முகம் என்பவர் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆகவே வேறு வகையில் அவரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் 12 பேருக்கும் முழு உடல் தகுதி மருத்துவ பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாமி ரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் , நாராயணன், சிவா, கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து, செந்தில் ஆகிய 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு அனுமதி கேட்டு டெல்லியில் உள்ள ஆய்வகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த கடிதத்தின்பேரில், இன்று முதல் 21ஆம் தேதி வரை சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி ஆய்வக அலுவலர்கள் சம்மதம் தெரிவித்து, சிறப்பு புலனாய்வுக் குழுவினருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து, இன்று முதல் நாளொன்றுக்கு 3 பேர் வீதம் 12 ரவுடிகளிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸ் வட்டாரங்களில் கூறுகையில், நிச்சயம் குற்றவாளி குறித்த அறிவியல் ரீதியான முடிவுகள் தெரியவரும். பரிசோதனை அறிக்கை இந்த மாத இறுதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றனர்.
கடந்த 11 ஆண்டுகாலமாக ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளி யார் என்ற மர்மம் விலகாமலேயே உள்ளன. கொலைக்கு என்ன காரணம் என்பதையும் இதுவரை காவல்துறையினர் கண்டறியமுடியவில்லை. 2023ஆம் ஆண்டிலாவது ராமஜெயத்தை கொடூரமாக கொன்ற உண்மை குற்றவாளி சிக்குவார்களா பார்க்கலாம்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications