கிளாம்பாக்கத்தில் போய் திண்டாட வேண்டாம்.. லீவுக்கு சொந்த ஊருக்கு போறவங்களுக்கு குட் நியூஸ்
சென்னை: ரம்ஜான் பண்டிகை மற்றும் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு முழுவதும் 1,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன்பிறகு வார விடுமுறை தினங்கள் வருகின்றன. இதனால், சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். இதனால், பயணிகள் கூட்டம் அலைமோதும் எனத் தெரிகிறது.

எனவே பயணிகளின் தேவைய கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக தமிழக அரசு இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு முழுவதும் 1,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகை: இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ரம்ஜான் பண்டிகை வருகிற 11-ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டியும், வரும் 13, 14-ம் தேதிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்களை முன்னிட்டும் சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை, நாளை மறுநாள்: இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 315 பேருந்துகளும் வெள்ளிக்கிழமை 290 பேருந்துகளும் , சனிக்கிழமை 340 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை: அதேபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது. 10 ஆம் தேதி 40 பேருந்துகளும் 12- ஆம் தேதி 40 பேருந்துகளும் 13-ந் தேதிகளில் 40 பேருந்துகளும் என 120 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
செல்போன் செயலி: பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் புக்கிங் செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications