சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை! விசிக திருமாவளவனுக்கு மிரட்டல்கள்? டிஜிபி அலுவலகத்து பறந்த கோரிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை : அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரப்பட்டது.

தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டதாகவும், அதன் மீது எந்த முடிவெடுக்கப்படாததால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

நீங்கெல்லாம் மனுஷங்க தானா? லட்டு வாங்கித் தர்றேன்.. 6 வயது சிறுமியிடம் அத்துமீறிய 60! ஷாக்கான சேலம்!நீங்கெல்லாம் மனுஷங்க தானா? லட்டு வாங்கித் தர்றேன்.. 6 வயது சிறுமியிடம் அத்துமீறிய 60! ஷாக்கான சேலம்!

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்

அந்த மனு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஊர்வலத்தின் போது கோஷங்கள் எழுப்பக் கூடாது என்றும், காயம் ஏற்படுத்தும் வகையிலான எந்த பொருட்களுக்கும் அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

 அனுமதி மறுப்பு

அனுமதி மறுப்பு

இந்நிலையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி திண்டுக்கல், விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்பட்டது. அந்த மனுவின் மீதான விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

திருமாவளவனுக்கு மிரட்டல்

திருமாவளவனுக்கு மிரட்டல்

இதைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்த காவல் துறை அனுமதிக்க அளிக்க வேண்டும் என அனுமதி வழங்க மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என நீதிபதி உத்தரவிட்டார். அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்

பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்

இந்த நிலையில் அக்டோபர் இரண்டாம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்த திட்டமிட்டு இருந்த மனித சங்கிலி போராட்டத்திற்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடைய விசிக தலைவர் தொல் திருமாவளவனுக்கு பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பார்த்திபன் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊர்வலம் காரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மறுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் திருமாவளவனுக்கு ஏராளமான மிரட்டல்கள் வருவதால் பாதுகாப்பை, அதிகரித்து ஆறு பேர் கொண்ட தனிப்படை போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

English summary
A petition has been filed in the DGP's office to increase the security provided to vck leader Thirumavalavan while the procession of the RSS organization scheduled to be held on October 2 has been banned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X