பள்ளி மாணவர்கள் திறனறித்தேர்வை தமிழில் நடத்த கோரிக்கை.. மதுரை எம்.பி.க்கு மத்திய அரசு பதில்!
சென்னை: பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஆன்லைன் திறனறித் தேர்வினை மாநில மொழிகளிலும் நடத்தக்கோரி மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதியிருந்த கடிதத்திற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்துள்ளார்.
மதுரை எம்பி சு.வெங்கடேசன் சில தினங்களுக்கு முன், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் 'கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா (KVPY) என்கிற திட்டத்தின் அடிப்படையில் அறிவியல் முனைப்புள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் என்ன செய்வார்கள்?
+1 , +2 மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு உதவித் தொகை(ரூ 80,000 இல் இருந்து ரூ 1,12,000) வழங்கப்டுகிறது. ஆனால் திறனறித் தேர்வு இரண்டு மொழிகளில் வினாத்தாள் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மட்டுமே. மாநில மொழிகளில் +1, +2 கல்வி பயிலும் மாணவர்கள் என்ன செய்வார்கள்?

மாநில மொழியில் தேர்வு வேண்டும்
இந்தியில் எழுதலாம். ஆனால் தமிழில் எழுத முடியாது என்றால் அது சமதள ஆடுகளத்தை எப்படி உறுதி செய்யும்? அறிவியல் முனைப்பிற்கும் ஆங்கிலம், இந்திக்கு என்ன சம்பந்தம்? ஆகவே அரசு மாநில மொழிகளிலும் வினாத் தாள்களுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். மாநில மொழியில் தேர்வு நடத்த வேண்டும்' என்று கூறியிருந்தார்.

வாக்குமூலமாக தெரிவிக்கப்படும்
இந்த நிலையில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதியிருந்த கடிதத்திற்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. இது தொடர்பாக பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இது குறித்து வழக்கு நிலுவையில் இருப்பதால் மத்திய அரசின் நிலை உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலமாக தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

நீதி தருவதாக இருக்கட்டும்
இதனை தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன் எம்.பி, 'அறிவியல் முனைப்புக்கும் ஹிந்திக்கும் என்ன தொடர்பு? KVPY-மாணவர் உதவித் தொகைக்கான ஆன்லைன் தேர்வை தமிழிலும் நடத்த கடிதம் எழுதியிருந்தேன். எனது கோரிக்கையை பரிசீலித்ததாகவும், வழக்கு இருப்பதால் அரசின் நிலை வாக்குமூலமாக உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் தெரிதித்துள்ளார். அரசின் பதில் தமிழக மாணவர்களுக்கு நீதி தருவதாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications