ஒரே நாள் கோரிக்கை...பெண் ஊழியர்களை மறக்காத முதல்வர் ஸ்டாலின்...சிஐடியூ நன்றி
கடை மற்றும் நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தருவதற்கான சட்டத்திருத்தம் செய்வதாக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று சிஐடியூ சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை: கடை மற்றும் நிறுவனங்களின் சிப்பந்திகளுக்கு இருக்கை வசதி செய்து தருகிற தமிழக அரசின் சட்டத்திருத்தத்தை சிஐடியு மகிழ்ச்சியோடு வரவேற்பதாக அறிவித்துள்ளது. சிஐடியு கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்திருக்கும் தமிழக அரசிற்கும், முதல்வருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக சிஐடியு மாநில தலைவர் சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
Recommended Video
தமிழகம் முழுவதும் துணிக்கடைகள், நகைக் கடைகள், வணிக நிறுவனங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இருக்கைகளில் அமர்ந்து பணியாற்ற இன்று சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1947ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் இந்த சட்ட முன்வடிவைப் பேரவையில் தாக்கல் செய்தார். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை நேரம் முழுவதும் நிற்க வைக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களுக்குப் பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுவதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் இருக்கை வசதி வழங்குவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா செப்டம்பர் 13ஆம் தேதி குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டசபையில் நிறைவேற்றப்படும்.
இந்த சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதற்கு சிஐடியு மாநிலத்தலைவர் சௌந்தரராஜன் நன்றி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துணிக்கடை, நகைக்கடை, மால்கள், பல்பொருள் அங்காடி போன்ற பெரிய விர்த்தக நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள், ஏராளமான இளம் பெண்கள் இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள், அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி, வேலை நேரச் சட்டம் போன்ற எதுவும் அமலாவதில்லை, 12 மணி நேர வேலை செய்யும் அவர்கள் வாடிக்கையாளர் இல்லாத நேரத்தில் கூட அவர்கள் உட்கார இருக்கை வசதி இல்லை.
அவர்கள் மொத்த வேலை நேரமும் நின்றபடியே வேலை செய்யவேண்டும். இது பலவிதமான உடல் ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்குகிறது. நரம்புத்தடித்தல், கர்ப்பப்பை பாதிப்பு போன்ற மோசமான விளைவுகளும் சிறு வயதிலேயே ஏற்படுகின்றன, கேரள அரசு 2017ம் ஆண்டிலேயே இந்த வகையான பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தரவேண்டும் என விதி செய்துவிட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு சிஐடியுவும், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தியது. அரசிடம் தொடர்ந்து முறையீடுகளை செய்தது. மார்ச் 8 உழைக்கும் பெண்கள் தினத்திற்கும் இந்தக் கோரிக்கை பிரதான கோரிக்கையாக்கப்பட்டது.
திமுக அரசு வந்தவுடன் சிஐடியு கொடுத்த கோரிக்கைகளில் இதுவும் ஒரு பிரதான கோரிக்கையாகும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சரிடம் தனியாகவும் முறையிட்டோம். அவர் இதைப் பரிசீலிக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்தார், அதற்கேற்ப தற்போது கடை மற்றும் நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தருவதற்கான சட்டத்திருத்தம் செய்வதாக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. சிஐடியு கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்திருக்கும் தமிழக அரசிற்கும், முதல்வருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்












Click it and Unblock the Notifications