பெண்களை குறி வைத்து நீராவி முருகன் அட்டகாசம்.. என்கவுண்டருக்கு பிறகு தென்மண்டல ஐஜி அன்பு சொன்ன தகவல்
ரவுடி நீராவி முருகன் என்கவுண்டர் செய்யப்படுவதற்கு முன்பு காவல்துறையினரை அரிவாளால் வெட்டியதில் 4 காவலர்கள் படுகாயமடைந்தனர்.
சென்னை: நீராவி முருகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் பெண் ஒருவரிடம் மிகப்பெரிய பட்டாக்கத்தியை காட்டி நகைப்பறித்த காட்சிகளை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது என்று தென்மண்டல ஐஜி அன்பு கூறியுள்ளார். நீராவி முருகன் தாக்கியதால் காயமடைந்த காவலர்களிடம் நலம் விசாரித்த ஐஜி அன்பு, ரவுடி என்கவுண்டர் சம்பவம் தற்காப்புக்காக நடைபெற்றதுதான் என்றும் கூறினார்.
Recommended Video
கடந்த மாதம் ஒட்டன்சத்திரத்தில் டாக்டர் சக்திவேல் வீட்டில் 150 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த நீராவி முருகன், அவரது காரையும் திருடிச் சென்றதாக தகவல் கிடைத்தது. மிகப் பெரிய கொள்ளை என்பதால், எஸ்.ஐ. இசக்கிராஜா தலைமையில் தேடுதல் வேட்டை தொடங்கியது. நீராவி முருகனின் செல்போனை டிரேஸ் செய்ததில் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை மூன்று நாட்களாகக் காட்டியிருக்கிறது.
களக்காட்டில் பதுங்கியிருந்த நீராவி முருகனை வளைத்திருக்கிறார்கள் தன்னுடைய 5001 பதிவு எண் கொண்ட இன்னோவா காரில் தப்பிய நீராவி முருகனை சுற்றி வளைத்தனர். அப்போது நீராவி முருகன் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியதால் எஸ்.ஐ.முத்துராஜாவால் என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கிறான். இதில் எஸ்.ஐ.இசக்கிராஜாவுக்கு தலையில் வெட்டு விழுந்துள்ளது. காவலர்களான சத்தியராஜ், கனகமணிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த நான்கு பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மண்டல ஐஜி அன்பு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர்களிடம் ஐ.ஜி அன்பு நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடந்த சம்பவம் பற்றி காவலர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர். அது தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடுவருக்கு அனுப்பி வைப்போம். என்கவுண்டர் தொடர்பாக நீதிமன்ற நடுவர் விசாரணை நடத்துவார். விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்த பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம்.

ஐஜி அன்பு பேட்டி
சென்னையில் பெரிய கத்தியை வைத்து பெரிய அளவில் மிரட்டிய காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டது அனைவரும் அந்த வீடியோவை டிவியில் பார்த்திருப்பார்கள். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னை வேளச்சேரியில் ஒரு டீச்சரிடம் செயின் பறித்ததில் சிசிடிவி காட்சியின் மூலம் வேளச்சேரி போலீசிடம் சிக்கினான். பெண்களை அச்சுறுத்தி நகை பறிப்பது இவனது தொழில். அவனை பிடிக்கப் போகும் போது காவலர்களை தாக்கியுள்ளான்.

கொள்ளை வழக்கில் தொடர்பு
திண்டுக்கல் மாவட்டத்தின் ஒட்டன்சத்திரத்தில் நடந்த 150 பவுன் நகை கொள்ளையில் தொடர்புடைய அவனைப் பிடிப்பதற்காக பழனி எஸ்.ஐ.இசக்கிராஜாவின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் நீராவி முருகன். களக்காடு பகுதியில் பதுங்கியிருப்பதாக தெரிந்ததை அடுத்து இங்கு காவல்துறையினர் தேடி வந்தனர். அவர்களை தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற நீராவி முருகனை தற்காப்புக்காக சப்இன்ஸ்பெக்டர் சுட்டார். நீராவி முருகன் தனியாக காரில் வந்ததாகவே ஐஜி அன்பு கூறியுள்ளார். காவல்துறையினர் எப்போதுமே ரவுடிகளை உடனே சுடுவதில்லை. கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதுதான் வழக்கம். இது போல நிகழ்வது அரிதானது என்றார். மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா
தூத்துக்குடி மாவட்ட மணியாச்சிப் பக்கமுள்ள பாறைக் குட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஐ.இசக்கிராஜா, கடந்த 2020ஆம் ஆண்டில் கோவில்பட்டியில் எஸ்.ஐ.யாகப் பணியிலிருந்தவர். எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் எஸ்.ஐ. இசக்கிராஜா, "என்னுடைய காவல் லிமிட்டில், ரவுடியோ, திருடர்களோ இருந்தால் வெளியேறிடுங்க, இல்லன்னா என் துப்பாக்கி தான் பேசும். என்கவுன்ட்டர் தான் என தன்னுடைய ஃபேஸ்புக்கிலும், பதிவிட்டவர் அதனை ஆடியோவாகவும் வெளியிட்டது சர்ச்சையாகியிருக்கிறது. ஆனால், அதன் காரணமாகவே அவரது காவல் லிமிட்டில் குற்றங்கள் குறைந்திருக்கின்றன.

நீராவி முருகன் பற்றிய தகவல்கள்
இந்த நிலையில் தான் எஸ்.ஐ.இசக்கி ராஜாவின் டீம் நீராவி முருகனைப் பல இடங்களில் தேடியுள்ளது. நீராவி முருகனும், எஸ்.ஐ.இசக்கிராஜாவும் அருகருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் நீராவி முருகன் பற்றிய துல்லிய தகவல்களை விரல்நுனியில் வைத்திருப்பவர் இசக்கிராஜா என்பதால் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் ஏ.டி.எஸ்.பி.லாவண்யா. தன்னுடைய பணியில் சிறப்பாகச் செயல்பட்டதால் எஸ்.ஐ.இசக்கிராஜா, டி.ஜி.பி.சைலேந்திரபாபுவிடமிருந்து விருதும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications