ரூ.10 மீண்டும்? அதே 10 ரூபாய் நாணயங்கள்.. பொள்ளாச்சியை அசத்திய ரூ. 10 வேட்பாளர்.. பலே பகுஜன் சமாஜ்
சென்னை: தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர், பொள்ளாச்சியையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.. என்ன காரணம்?
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வேட்பு மனுக்களும் தாக்கலாகி வருகின்றன.. இந்த வேட்பு மனு தாக்கல், நாளையுடன் முடிவடைகிறது.. ஆரம்பத்தில் பிரதான கட்சி வேட்பாளர்கள் ஆர்வம் காட்டாத நிலையில் முதல் நாளில் வெறும் 22 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்கள்..

வேட்பு மனு தாக்கல்: ஆனால் நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் திமுக, அதிமுகவினர் உட்பட மொத்தம் 405 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்களாம். அதேபோல, பல்வேறு வேட்பாளர்கள் நூதன முறையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து அசத்தி வருகிறார்கள்..
இப்படித்தான், திருச்சியில் உறையூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் ராஜேந்திரன் என்பவர், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.. வெறும் ஆதார் அட்டைகளையும், வாக்காளர் அட்டைகளையும் கழுத்தில் மாலையாக மாட்டிக் கொண்டு, வந்து கலெக்டர் பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஆதார் கார்டு: டிஜிட்டல் இந்தியாவில் வேட்பாளர்கள் பணம் செலுத்த டிஜிட்டல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டே, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஏடிஎம் கார்டுகள் இப்படி எல்லா கார்டுகளையும் கழுத்தில் மாலையாக அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
கயிறு கட்டிய வேட்பாளர்: அதுபோலவே, மதுரையில் ஒரு சுயேச்சை வேட்பாளர் சங்கரபாண்டியன் என்பவர், ஓட்டுக்கு பணம் பெற்று வாக்களிப்பதற்கும், பணம் கொடுத்து வாக்கு பெறுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூக்கு கயிறை கழுத்தில் தொங்கவிட்டபடியே வந்து, வேட்புமனு தாக்கல் செய்தார்..
ஆனால், 100 மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே போலீசார் அவரிடம் இருந்த கயிறு, பதாகைகளை பறிமுதல் செய்து, அவரை முழுவதுமாக சோதனை செய்து, அதற்கு பிறகே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதித்தனர்.
பெஞ்சமின்: அதுபோலவே, பொள்ளாச்சி தொகுதியில் ஒருவர், வேட்பு மனு தாக்கல் செய்து மொத்த பேரையும் கிறுகிறுக்க செய்துள்ளார்.. இந்த வேட்பாளர் பெயர் பெஞ்சமின் பிரபாகர்.. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார். டெபாசிட் தொகையான ரூ.25 ஆயிரத்தையும், வெறும் 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்திருந்தார்.
இதற்கு பெஞ்சமின் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? இப்போதெல்லாம் 10 ரூபாய் நாணயங்களை யாருமே வாங்குவதில்லையாம்.. ரிசர்வ் வங்கி பலமுறை சொல்லியும்கூட 10 ரூபாய் நாணயங்களை வாங்க கடைக்காரர்கள் மறுக்கிறார்களாம். அதனால், இந்த நாணயங்களை அனைவரும் வாங்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு 10 ரூபாய் நாணயங்களுடன் வந்ததாக சொன்னார்.
நாணய மூட்டைகள்: மொத்தம் 25 ஆயிரம் ரூபாய்க்கும், 10 ரூபாய் நாணயங்களை மூட்டை கட்டி கொண்டு வந்து கொடுத்த நிலையில், சப்-கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அந்த நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவ்வளவு நாணயங்களையும் எப்போது எண்ணி முடித்தார்களோ, தெரியவில்லை...!!
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications