"டிரைவிங் லைசென்ஸ்" மக்களுக்கு 2 நாட்கள் மட்டுமே அனுமதி.. ஆர்டிஓ அலுவலக நடைமுறையில் மாற்றம்!
சென்னை: மக்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் கடந்த ஒரு மாதமாக பின்பற்றி வந்த நடைமுறை, மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்படும். 18 வயது நிரம்பிய ஆண்கள், பெண்கள் அனைவரும் வாகனங்களை இயக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
அப்படி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கினால், போக்குவரத்து போலீசாரால் அபராதம் விதிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாரத்தில் ஐந்து நாட்கள் இயங்கும்.

பயிற்சி பள்ளிகள் ஆதிக்கம்
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு பொதுமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதேபோல் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அண்மைக் காலமாக வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் தொடர்பாக மக்களிடம் இருந்து பெறப்படும் நேரடி விண்ணப்பங்களுக்கு தாமதம் ஏற்படுவதாகவும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் புகார்கள் எழுந்தது.

புதிய நடைமுறை
இதையடுத்து போக்குவரத்து துறை ஆணையர் தரப்பில் இருந்து வட்டார போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு கடந்த செப்டம்பரில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் 'வாரத்தின் திங்கள், வியாழன், வெள்ளி மூன்று நாட்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு தேர்வு நடத்த வேண்டும். செவ்வாய், புதன் இரு நாட்கள் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு தேர்வு நடத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.

பயிற்சி பள்ளிகள் வேலைநிறுத்தம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கடந்த மாதம் 13ம் தேதி முதல் ஒரு வாரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் செப்.20ம் தேதிக்கு பின்னர் ஓட்டுநர் உரிமத் தேர்வில் பங்கேற்க அவர்கள் முன்பதிவு செய்ய முயற்சித்தனர்.
ஆனால், பலரால் முன்பதிவு செய்ய முடியவில்லை. தொடர்ந்து இந்த நடைமுறை காரணமாக தங்களுக்கு பாதிப்புஏற்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சரிடம் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

நடைமுறையில் மாற்றம்
அதன்பேரில், மீண்டும் ஆலோசனை நடத்தி, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் ஒதுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் திங்கள், வெள்ளி இரு தினங்கள் மட்டும் பொதுமக்களிடம் இருந்து நேரடி விண்ணப்பம் பெற்று தேர்வு நடத்த வேண்டும் எனவும், செவ்வாய், புதன், வியாழன் மூன்று நாட்கள் ஓட்டுநர் பயிற்சி பள்ளி விண்ணப்பங்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications