எல்காட் நிறுவன செயல் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி அருண்ராஜ் நியமனம் - 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்
தமிழக அரசின் எல்காட் நிறுவன செயல் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி அருண்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழக அரசின் எல்காட் நிறுவன செயல் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். பால்வளம், பால் பண்ணை வளர்ச்சித்துறை ஆணையராக ஜி.பிரகாஷ் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு ஆணையராக பிரகாஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கனிம வளத்துறையின் மேலாண் இயக்குனராக சுதீப் ஜெயின் ஐஏஎஸ், தமிழக அரசின் எல்காட் நிறுவன செயல் அதிகாரியாக அருண்ராஜ் ஐஏஎஸ் நியமிக்கப் பட்டுள்ளனர்.
Electronics Corporation Of Tamilnadu Limited (ELCOT) எனப்படும் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தமிழக அரசின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஐ.டி. பூங்காக்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்களை கவனிக்கிறது. அரசின் இலவச மடிக்கணினிகளை கொள்முதல் செய்து தருவதும் அரசின் தகவல் தொழில் நுட்பத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள எல்காட் தான். இந்த நிறுவனத்தின் செயல் அதிகாரியாக அருண்ராஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications