கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டார்.. அக்.9 முதல் 11 ஆம் தேதி வரை 3 நாட்கள் கொங்கு ஈஸ்வரன் நடைபயணம்!
சென்னை: சேலம் -உளுந்தூர்பேட்டை இடையே அக்.9 முதல் 11 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சேலம் உளுந்தூர்பேட்டை இடையே அனைத்து பகுதிகளையும் நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்றும் சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும் இந்த நடைபயணத்தை அவர் நடத்துகிறார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

அப்பாவி மக்கள்
அப்பாவி பொதுமக்களின் உயிரை காவு வாங்கும் சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஒன்பது இடங்களில் நான்கு வழிச்சாலை இருவழிச்சாலையாக மாறுகிறது. இருவழிச்சாலையாக இருக்கிற பகுதி 37 கிலோமீட்டர் நீளம் கொண்டது.தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் பயணித்துவிட்டு திடீரென அகலம் குறுகிய இருவழிச் சாலைக்கு மாறும் பொழுது வாகனங்கள் அதிக அளவில் விபத்துகளில் சிக்குகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

4,000 விபத்துக்கள்
அவற்றில் ஒரு சில பெரிய அளவிலான விபத்துக்கள் மட்டுமே வெளியே தெரிகிறது. மேலும் பல சிறு விபத்துகள் வெளியே தெரிவதில்லை. அண்மையில் வந்த செய்தி மற்றும் புள்ளி விவரங்களின் படி கடந்த 11 வருடங்களில் 1050 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பதும், 4000க்கும் மேற்பட்ட விபத்துகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டு படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றும் அதில் பலர் ஊனத்துடனும் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது.

காவு வாங்கும் சாலை
காவு வாங்கும் இந்த சாலையை பொதுமக்கள் மிகுந்த மரண பயத்துடன் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தின் மேற்கு பகுதி சென்னையுடனும் மற்றும் நாட்டின் மற்ற பகுதியுடனும் இணைக்கின்ற சாலை. அதனால் போக்குவரத்து மிக அதிகமாக உள்ள சாலையாக இது உள்ளது. இது சம்பந்தமாக நான் தமிழக சட்டமன்றத்தில் கள நிலவரத்தை விளக்கி பேசி உள்ளேன். இருவழிச் சாலை முழுவதையும் நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளேன்.

பணிகள் ஆரம்பிக்கவில்லை
நெடுஞ்சாலை துறை அமைச்சரும் சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்டார். ஆனாலும் உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுகின்ற பணிகள் தொடங்கப்படவில்லை. தமிழக அரசும், ஒன்றிய அரசும் கலந்து ஆலோசித்து போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை முழுவதுமாக நான்கு வழிச்சாலையாக மாற்றிக் கொடுக்க வேண்டும்.

3 நாள் நடைபயணம்
எனவே சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து பகுதிகளும் நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் மாற்றும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும் வருகின்ற அக்டோபர் மாதம் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக நடைபயணம் மேற்கொள்ள விருக்கிறோம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications