திமுகவுக்கு "உதவும்" எடப்பாடி பழனிசாமி.. ஆமா.. இப்டியே எத்தனை பேர்?.. இதுவா ராஜதந்திரம்?.. விளைவு?
சசிகலாவின் வருகையை தடுக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது
சென்னை: "இப்படியே எத்தனை பேரைத்தான் நீக்கிக் கொண்டே இருப்பார்கள்... இவர்கள் நீக்க நீக்க திமுகவுக்கு பலம்தான்.. அதிமுகவுக்கு சரிவுதான்.. சசிகலா விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி உடனடியாக ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஆதங்க குரல்கள் இப்போதே எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டன..!
நாளுக்கு நாள் சசிகலாவின் சவுண்டு அதிகரித்து கொண்டிருக்கிறது.. எடப்பாடி பழனியோ அமைதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.. தினகரனோ, ஏற்கனவே சைலண்ட் மோடுக்கு போய்விட்டார்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, அதிமுக கூடாரம் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது.. முதலில் தொண்டர்களிடம் மட்டும்தான் சசிகலா பேசுவதாக சொன்னார்கள்.. பிறகு நிர்வாகிகள் என்றார்கள்.. பிறகு முக்கிய தலைவர்கள் என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

சசிகலா
இதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி அசால்ட்டாக விட்டுவிட்டார் என்று சொல்ல முடியாது.. அவர் இப்போது வரை தெரிந்தேதான் அமைதி காக்கிறார்.. சசிகலாவை எதிர்க்கிறார்.. இப்போது விஷயம் என்னவென்றால், ஊரடங்கு முடிந்ததும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சுற்றுப் பயணம் போக போகிறார் சசிகலா.. ஒவ்வொரு தொண்டரையும் சந்திக்க போகிறார்.. இதையும் அசால்ட்டாக எடப்பாடி எடுத்து கொண்டுவிட முடியாது.

தெம்பு
காரணம், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்களுக்கு வர போகிறது.. 4 நாளைக்கு முன்பு, திமுகவை எதிர்கொள்ள, மாவட்ட செயலாளர்களுக்கு நம்பிக்கையும் தெம்பும் தந்து எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.. திமுகவை வெல்ல வேண்டும், கோட்டை விட்டுவிடக்கூடாது, தைரியமாக களத்தில் இறங்குங்கள், எதையும் மனதில் வைத்து கொள்ளாமல், வெற்றியை நோக்கி நடைபோட வேண்டும் என்றெல்லாம் சொன்னார்..

ஆதரவாளர்கள்
ஆனால், சசிகலா பற்றி எடப்பாடி பழனிசாமி வாயே திறக்கவில்லை.. இத்தனைக்கும் அவரது ஆதரவாளர்களே பகிரங்கமாக எதிர்த்து வருகிறார்கள் என்று தெரிந்தும், அவரை பற்றி பேசவே இல்லை. தூத்துக்குடியில் தீர்மானம் நிறைவேற்றினார்களே, அதை பற்றிகூட விவாதிக்கவில்லை.. இவருக்கு மேல் அமைதி காத்து வருகிறார் ஓபிஎஸ்..

தீர்மானம்
சசிகலாவுக்கு எதிராக இப்படி மாவட்ட அமைப்புகளை தீர்மானம் நிறைவேற்றச் சொல்லி கேட்டிருந்தும், இன்னும் பல மாவட்டங்களில் தீர்மானமும் நிறைவேற்றவில்லை.. இந்த சூழலில்தான், சசிகலாவின் சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

நீக்கம்?
யாரெல்லாம் சசிகலா ஆதரவாளர்களோ அவர்களை எல்லாம் எடப்பாடி பழனிசாமி நீக்கி கொண்டிருக்கிறார்.. அந்த வகையில், இன்னும் எத்தனை பேரை அவர் நீக்குவார்? அப்படி நீக்கினால் கட்சியில் யார்தான் மிச்சம் இருப்பார்கள்? நீக்கப்படுவோர் யாரும் சாதாரண நபர்கள் இல்லை.. அனைவருமே கட்சிக்காக தீவிரமாக பாடுபட்டவர்கள், வெற்றிக்காக வியர்வை சிந்தியவர்கள். இவர்களை நீக்கி விட்டு யாரை வைத்து கட்சியை நடத்தப் போகிறார்கள்? என்ற பல கேள்விகள் நம்மிடம் எழுகிறது.

திமுக
அதுமட்டுமல்ல, இவர்களை நீக்குவதை தொடர்ந்தால் அது கட்சிக்குத்தான் ஆபத்து... நீக்கப்படுவோர் ஒன்று சசிகலாவுடன் போய்ச் சேருவார்கள் அல்லது திமுக போன்ற கட்சிகளுக்குப் போய் செட்டிலாகி விடுவார்கள். போதாக்குறைக்கு யார் வந்தாலும் திமுக வாரி அணைத்து கொள்கிறது.. பதவி தந்து அழகு பார்த்து கவுரவம் தந்து வருகிறது.. நாளுக்கு நாள் ஸ்டாலினின் மதிப்பும் எகிறி கொண்டிருக்கிறது.

அசுர பலம்
இதனால் அதிமுகவுக்கு என்ன லாபம் கிடைக்கும்? ஓபனாக சொல்ல போனால், திமுகவின் வளர்ச்சிக்கு எடப்பாடி உதவி கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.. அதனால் சசிகலா ஆதரவாளர்களை நீக்குவதற்குப் பதில் சசிகலாவுடன் சமரசம் பேசலாம் அல்லது இவர்களை கண்டு கொள்ளாமல் விடுவதுதான் ராஜ தந்திரமாகும். அதாவது, சசிகலாவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. அவரை யாராலும் "கன்ட்ரோல்" செய்யவும் முடியாது..

லாபி
30 வருஷம் ஜெ.விடம் லாபி செய்தவருக்கு, எடப்பாடி பழனிசாமியையும், ஓபிஎஸ்ஸையும் சமாளிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.. அதிமுக என்ற ஆலமரம் கலையக்கூடாது என்ற ஒரு விஷயத்துக்காக, பல விஷயங்களில் பொறுமை காக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.. சசிகலா இந்த அளவுக்கு பொறுமையாக இருப்பதே பெரிய விஷயம்.. யாரையுமே ஒரு அளவுக்கு மேல் சீண்டினால், அவர்கள் முன்பிருந்த இயல்பை விட அசுர பலம் பெற்றுவிடுவார்கள்.. அந்த பலமே எதிர்தரப்பை காலி செய்துவிடும்.. இதுதான் இயற்கை.. இதில் எடப்பாடி பழனியும் விதிவிலக்கல்ல..!
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications