அதிமுக என்ன கம்பெனியா.. தொண்டர்கள் முடிவு செய்வார்கள்.. ஜெயக்குமாருக்கு சசிகலா பதிலடி!
சென்னை: அதிமுகவின் தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்று ஒரு கம்பெனியை போல் யாரும் சொல்ல முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்துக்கு சசிகலா பதிலடி கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பொங்கல் பரிசில் கரும்பு கொடுக்காமல், தமிழக அரசு விவசாயிகளை தெருவில் நிறுத்தியுள்ளதாக விமர்சித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
எம்ஜிஆர் நினைவிடத்தில் சசிகலா தரப்பினர் உறுதிமொழி ஏற்றனர். அப்போது, அதிமுகவுக்கு சசிகலாவை தலைமை தாங்க வைக்கவும், திமுகவை வென்று அதிமுக ஆட்சி அமைத்து மக்கள் பணி செய்திட உறுதிமொழி ஏற்றனர்.

ஜெயக்குமாருக்கு பதிலடி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலாவிடம் ஜெயக்குமாரின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சசிகலா, எனக்கும் - அதிமுகவுக்கும் சம்மந்தமில்லையா என்று தொண்டர்களிடம் கேள்வி கேட்டால், சரியான பதில் கிடைக்கும். தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று தனிப்பட்ட நபர் ஒரு கம்பெனிய நடத்துவது போல் சொல்ல முடியாது. அதனால் அதிமுகவில் தொண்டர்களின் முடிவு தான் முக்கியமானது. அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் அப்படி தான் கட்சியை உருவாக்கியுள்ளார் என்று தெரிவித்தார்.

தொண்டர்கள் எண்ணம்
தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பது குறித்த கேள்விக்கு, எனது வழக்கு வேறு. ஓபிஎஸ் - எடப்பாடி பழனிசாமி இடையிலான வழக்கு வேறு. அதிமுகவை பொறுத்தவரை தொண்டர்களின் எண்ணம் எதுவோ, அதுதான் வெற்றிபெறும். தொண்டர்களின் முடிவுபடி தான் நடக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பொங்கல் பரிசு
பின்னர் தமிழக அரசின் பொங்கல் பரிசு குறித்து சசிகலா கூறுகையில், கரும்பை மக்களிடம் விற்பனை செய்ய வழியில்லாமல் விவசாயிகள் தெருவில் நிற்கிறாகள். அதிமுக ஆட்சியில் 7 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் போது, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் கரும்பு வழங்கியுள்ளோம். அதனை திமுக அரசு நிறுத்தியுள்ளது. அதனை பற்றி பேசவே பயப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ் - இபிஎஸ்
தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவருக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, அதிமுகவின் தலைவர்களுக்கு நாம் பிறந்தநாள் கொண்டாடுகிறோம், நினைவு அஞ்சலியையும் செலுத்துகிறோம். எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே பயணித்துள்ளது. அதனால் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். திமுகவுக்கு எந்த சூழலிலும் இடம் கொடுத்துவிடாமல் அதிமுகவினர் செயல்பட வேண்டும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications