Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு.. இன்று வெளியாகும் தண்டனை விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை மகன் லாக்அப் மரணம் விவகாரத்தில் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு இருந்த சூழலில், இன்றைய தினம் தண்டனை விவரம் வெளியாகவுள்ளது. காலை 9.30 மணியளவில் நீதிபதி தண்டனை விவரத்தை அறிவிக்கிறார்.

கொரோனா காலத்தில் கடந்த 2020ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தமிழ்நாட்டையே உலுக்கும் சம்பவம் நடைபெற்றது. அங்கு கடை நடத்தி வந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் லக் அப் மரணம் அடைந்தனர். இது அப்போது மாநிலத்தையே அதிர வைக்கும் சம்பவமாக மாறியது.

Sathankulam court

சாத்தான்குளம்

அதாவது அனுமதிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்திருந்தது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முதலில் தந்தையையும் பிறகு மகனையும் போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றுள்ளனர். இருவரையும் போலீசார் மிக கடுமையாக தாக்கியுள்ளனர். காவலர்கள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த தந்தையும் மகனும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் விசாரணையின்போதும் பல திடுக் சம்பவங்கள் நடந்தன. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சூழலில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இது தொடர்பான வழக்கை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

9 காவலர்கள்

இதற்கிடையே கடந்த மாதம் 23ம் தேதி தான் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பளித்தார். தண்டனை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் அறிக்கை கோரப்பட்டிருந்த சூழலில், அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் தண்டனை விவரம் அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று தண்டனை விவரம்

இந்தச் சூழலில் தான் சாத்தான்குளம் வழக்கில் இன்றைய தினம் தண்டனை விவரம் வெளியாகிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும். இன்று காலை 10.30 மணியளவில் நீதிபதி முத்துகுமரன் தண்டனை விவரத்தை வெளியிடுகிறார். வழக்கில் கைது செய்யப்பட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று அவர்கள் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்படுவார்கள். அதன் பின்னர் அவர்களுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி அறிவிப்பார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+