மிக தகுதி வாய்ந்த நபர் சத்யராஜ்.. கலைத்துறையில் இருந்து திராவிட கொள்கை பேசுபவர்.. ஸ்டாலின் புகழாரம்!
சென்னை: "மிக மிக தகுதி வாய்ந்த நபரான சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது. கலைத் துறையில் இருந்து சுயமரியாதை, பகுத்தறிவு என திராவிட கொள்கைகளை பேசுபவர் சத்யராஜ்” என புகழாரம் சூட்டியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட முத்தமிழ்ப் பேரவையின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம், இசை விழா, விருதுகள் வழங்கும் விழா சென்னை அண்ணாமலைபுரத்தில் இன்று நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நடிகர் சத்யராஜுக்கு 'கலைஞர் விருது’, திருப்பாம்புரம் டி.கே.எஸ்.மீனாட்சி சுந்தரத்துக்கு 'ராஜரத்னா விருது’, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினிக்கு 'இயல் செல்வம் விருது’, முனைவர் காயத்ரி கிரிஷுக்கு 'இசைச் செல்வம் விருது’, திருக்கடையூர் டி.எஸ்.உமாசங்கருக்கு 'நாதஸ்வரச் செல்வம் விருது’, சுவாமிமலை சி.குருநாதனுக்கு 'தவில் செல்வம் விருது’, முனைவர் தி.சோமசுந்தரத்துக்கு 'கிராமியக் கலைச் செல்வம் விருது’, பார்வதி ரவி கண்டசாலாவுக்கு 'நாட்டியச் செல்வம் விருது’ ஆகியவற்றை வழங்கி கௌரவித்தார்.

அதைத்தொடர்ந்து, முத்தமிழ் பேரவையின் பொன்விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “நடிகர் சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கியதில் மகிழ்ச்சி. மிக மிக தகுதி வாய்ந்த நபரான சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது. கலைத் துறையில் இருந்து சுயமரியாதை, பகுத்தறிவு என திராவிட கொள்கைகளை பேசுபவர் சத்யராஜ்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “முத்தமிழ்ப் பேரவை தொடங்கிய காலத்தில் இருந்து ஆண்டுதோறும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நேரத்தை ஒதுக்கி, தனது கடமையாக கருதி கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி வந்தார். அவர் வழியிலே நானும் எனது கடமையை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறேன்.
முத்தமிழ்ப் பேரவை வழங்கியுள்ள இந்த விருதுகள் என்பது முத்தமிழறிஞர் கலைஞரே வழங்கிய விருதுக்கு ஒப்பானது. இயல் இசை நாடகம் என்ற முத்தமிழிலும் முத்திரை பதித்தவர் கலைஞர். முத்தமிழுக்கு இலக்கணமாக விருது பெற்ற நீங்கள் அனைவரும் உங்களைப் போல பல திறமைசாலிகளை வளர்த்தெடுக்க வேண்டும்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது நம் முழக்கம். அந்த வரிசையில் இசையிலும் தமிழ் ஒலிக்க வேண்டும். செழிக்கனும். இடையில் சாதி, மதம் என அந்நியர்கள் மூலமாக பல்வேறு பண்பாட்டுத் தாக்குதல்கள் நடந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி தமிழும், தமிழினமும், தமிழ்நாடும் நின்று நிலைக்க தமிழின் வலிமையும் நமது பண்பாட்டின் சிறப்பும் தான் காரணம். எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும், கலைக்கும் உண்டு. அவை இரண்டையும் கண் போலக் காக்க வேண்டும்.” என்றார்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
"எனது மகள் திவ்யா பற்றி பரவி வரும் வதந்திகளில் எதுவும் உண்மையல்ல”.. நடிகர் சத்யராஜ் விளக்கம்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications