Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து அக்டோபரில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள், சுகாதாரத்துறை நிபுணர்களின் கருத்தைக் கேட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று எங்கேயும் நாங்கள் தெரிவிக்கவில்லை என்றும் குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு வர யாரும் வற்புறுத்த வேண்டாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக பல மாதகாலமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனைக்குப் பிறகு தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து கடந்த 14ம் தேதி ஆலோசனை நடத்தினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொளி காட்சி மூலம் 14ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது. சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மற்ற சிலர் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளை திறக்கலாம் என்று தெரிவித்துள்னர்.

பள்ளிகளை திறக்க பரிந்துரை

பள்ளிகளை திறக்க பரிந்துரை

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அளித்த கருத்துக்களையும் தொகுத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அதில், 6 முதல் 8 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என அதில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் ஆலோசனைக்குப் பின் அறிவிப்பு

முதல்வர் ஆலோசனைக்குப் பின் அறிவிப்பு

அந்த அறிக்கையின் அடிப்படையில், வரும் 30ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நடைபெறவுள்ள ஊரடங்கு ஆலோசனையில் பள்ளிகளை திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.அறிக்கை பரீசீலிக்கப்பட்டு சுகாதாரத்துறை கருத்துக்களை பெற்று முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரிகளுடன் ஆலோசனை

அதிகாரிகளுடன் ஆலோசனை

இதனிடையே சென்னை டிபிஐ வளாகத்தில், பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்த வேண்டிய அறிவிப்புகள் குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், பள்ளிக்கல்வித்துறை மேலாண்மை இயக்குநர் மணிகண்டன் உள்ளிட்டர் கலந்துகொண்டனர்.

திட்டங்களை செயல்படுத்த ஆலோசனை

திட்டங்களை செயல்படுத்த ஆலோசனை

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் பள்ளி கல்வித் துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. சட்டசபைக் கூட்டத்தொடரில் பள்ளி கல்வித் துறை சார்பாக 28 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிப்புக்கு ஒருவர் பொறுப்பு என்பதுபோல் அதிகாரிகளுக்கு பணிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. திட்டங்களை செயல்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பலவித கருத்துக்கள்

பலவித கருத்துக்கள்

மானிய கோரிக்கையின் போது அனைத்து தரப்பினர் பாராட்டை பெற்றிருந்தாலும் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றினால்தான் அடுத்த கூட்டத்தொடரிலும் பாரட்டை பெறமுடியும் என்றும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார். பள்ளிகள் திறப்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஒவ்வொரு கருத்து உள்ளது. கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை அவர்கள் கூறிய கருத்துக்கள் ஆகியவற்றை அறிக்கையாக முதல்வரிடம் கொடுத்திருக்கிறோம்.

பெற்றோர்களின் கருத்து

பெற்றோர்களின் கருத்து

சில அதிகாரிகள் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என்றும், சிலர் 8 வரை பள்ளிகளை திறக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். எங்களிடம் பேசிய முதல்வர்,பெற்றோர்களிடமும் கருத்து கேட்ட பின்னர் பள்ளிகளைத் திறப்பது பற்றி அறிவிக்கலாம் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஊரடங்கு தொடர்பாக 31ஆம் தேதி கூட்டம் நடக்க உள்ளது. அப்போது மக்கள் நல்வாழ்வுத் துறை நிபுணர்கள் கொடுக்கும் ஆலோசனையின் அடிப்படையில் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுத்து முதல்வர் அறிவிப்பார்.

மாணவர்களுக்கு கட்டாயமல்ல

மாணவர்களுக்கு கட்டாயமல்ல

குழந்தைகளை பள்ளிக்கு வர கட்டயப்படுத்தும் காலகட்டம் இதுவல்ல. குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு வர யாரும் வற்புறுத்த வேண்டாம். உயர்நீதிமன்றமும் இதனை அறிவுறுத்தியுள்ளது. பெற்றோர்களுக்கும் ஒருவித அச்சம் உள்ளது. பள்ளிகள் திறந்த பிறகு இதுவரை148 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றை காட்டிலும் மிகப்பெரிய பாதிப்பாக இருப்பது குழந்தைகள் வீட்டில் இருப்பதால் குழந்தைகளின் மனரீதியாக பாதிக்கப்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. சௌமியா சுவாமிநாதன் கூட பள்ளிக்கு வருவதுதான் மாணவர்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நல்லது என்று கூறியுள்ளார்.

மாணவர்கள் இடை நிற்றல்

மாணவர்கள் இடை நிற்றல்

பள்ளிகளில் இடைநிற்றல் குழந்தைகளை கணக்கெடுக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளுக்கு வர வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்படவில்லை என்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என கூறிய அவர், நீட் தேர்வின் முடிவின் அடிப்படையில் பயிற்சி முறைகளை மேம்படுத்துவதா அல்லது மாணவர்களின் திறனை மேம்படுத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+