மழை விடுமுறை...அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் விடுமுறை நாட்களில் கருத்தில் கொண்டு அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் விடுமுறை நாட்களில் கருத்தில் கொண்டு அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. தீபாவளி, தொடர்மழை என பள்ளிகளுக்கு கடந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகளை திறக்க பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளிகள் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருப்பதாலும், ஆன்லைன் கல்வியினாலும் மாணவர்களின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்படக்கூடும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. நவம்பர் 1 முதல் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.முதல் இரண்டு வாரங்கள் மாணவர்களுக்கு நடனம், நாடகம், பாடல் ஆகியவை கற்றுத் தரப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.
மாணவர்கள் பொதுத் தேர்வை நேரடியாக எழுத செல்லும் போது பயப்பட நேரிடும். இதனால் மாணவர்களின் பயத்தை போக்கும் வகையில் ஜனவரி, மார்ச் மாதத்தில் மாணவர்களுக்கு மாடல் தேர்வு நடத்தப்படும் என்று இரு தினங்களுக்கு முன்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அவர்கள் பொதுத் தேர்வில் எந்த ஒரு பயமும் தயக்கமின்றி எழுதுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி கூறியுள்ளார்.
தீபாவளிப் பண்டிகை, தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் கடந்த ஒரு வாரகாலமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை சில மாவட்டங்களில் ஓய்ந்தாலும் கன்னியாகுமரியில் மழை, வெள்ளம் நீடிக்கிறது. இந்த நிலையில் மழை ஓய்ந்த பகுதிகளில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விடுமுறை நாட்களில் கருத்தில் கொண்டு அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. தீபாவளி, தொடர்மழை என பள்ளிகளுக்கு கடந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகளை திறக்க பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications