சீமான் கையில் இப்படி ஒரு பிளானா? தனித்து விடப்பட்ட எடப்பாடி.. சீக்ரெட்டை சொன்ன ரவீந்திரன் துரைசாமி
சென்னை: அதிமுகவில் பல விஷயங்கள் எடப்பாடிக்கு எதிராக மாறும். அதிமுக செயற்குழு கூட்டத்தில் இதெல்லாம் பெரிதாக வெடிக்கும். அதிமுக செயற்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும், என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் மா.செ.க்கள் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 16-ந்தேதி நடக்கும் என எடப்பாடி பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் பல பிரச்சனைகள் முடிவிற்கு வரும் என்கிறார்கள். அதாவது அதிமுக பிரச்சனைகளுக்கு கிளைமேக்ஸ் வரும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!

அவசர செயற்குழுவைக் கூட்ட வேண்டிய அவசரம் என்ன? என்பது குறித்துதான் அதிமுகவில் பேசுபொருளாகி வருகிறது. கிட்டத்தட்ட அதிமுகவில் பெரிய புயலை போல இந்த கூட்டம் மாறி உள்ளது. திமுக, பாஜக கட்சிகள் கூட இந்த செயற்குழுவை உன்னிப்பாக கவனிக்கின்றன. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அணிச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதால் அதிமுகவின் செயற்குழு எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.
ஆனால் இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
பேட்டி: ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அதிமுக செயற்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அண்ணாமலை எடப்பாடியை லெப்ட் ஹேண்டில் டீல் செய்துவிட்டார். சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் கூட அண்ணாமலை எடப்பாடியை திணற அடித்து விட்டார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வென்றது. அங்கே அதிமுக போட்டியிடாமல் போனதற்கு இதுவே காரணம். அதிமுகவுடன் யாரும் கூட்டணி வைக்க தயாராக இல்லை. நாம் தமிழர் - அதிமுக கூட்டணி சாத்தியம் இல்லை.
ஜெயலலிதா இருந்த போது அதிமுகவிடம் நெருக்கமாக இருந்தவர்கள் இப்போது நாம் தமிழர் பக்கம் சென்றுள்ளனர். இதுதான் எடப்பாடிக்கு சிக்கலே. சீமான் தன்னுடைய தலைமையை ஏற்று வருபவர்களே வேண்டும் என்கிறார். விக்கிரவாண்டியில் அதிமுக தங்களுடன் வருமா.. அதிமுக வாக்குகள் தனக்கு வருமா என்று பார்த்தார். அது வரவில்லை. அப்படி இருக்க இனி அதிமுக தனக்கு வேண்டாம் என்று சீமான் நினைக்கிறார்.
இன்னொரு பக்கம் பாஜக தமிழ்நாட்டில் தனியாக வர வேண்டும் என்று நினைக்கிறது. நாங்கள் ஏறி வர வேண்டும். அடித்து தூக்க வேண்டும் . இல்லையென்றால் வீழ வேண்டும். இடையில் இருக்க கூடாது என்று பாஜக நினைக்கிறது. யாரையும் நம்பி இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கவில்லை. 2026 பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்காது. அதிமுகவுடன் பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் என்று யாரும் கூட்டணி வைக்க மாட்டார்கள்.
இதெல்லாம் எடப்பாடிக்கு எதிராக மாறும். அதிமுக செயற்குழு கூட்டத்தில் இதெல்லாம் பெரிதாக வெடிக்கும். அவரிடம் இப்போது கையெழுத்து போடும் பவர் இருப்பதால் சிலர் கொஞ்சம் அமைதியாக இருக்கின்றனர். அதிமுகவிடம் காங்கிரஸ் வராது. காங்கிரசுக்கு எம்பி, எம்எல்ஏ போஸ்டுகளை கொடுத்தது யார்? திமுக. விசிகவும் அப்படித்தான். அவர்கள் எம்பி, எம்எல்ஏக்கள் போஸ்டுகளை சொந்த சின்னத்தில் வாங்க திமுகதான் காரணம்.
இவர்கள் எல்லாம் இதை விட்டுவிட்டு அதிமுகவிடம் யார் செல்வார்கள். யாரும் செல்ல மாட்டார்கள். அப்படி இருக்க எடப்பாடி தனித்து விடப்பட்டு உள்ளார். எடப்பாடி கூட்டணி தோல்வி கூட்டணி. இதெல்லாம் எடப்பாடிக்கு எதிராக மாறும். அதிமுக செயற்குழு கூட்டத்தில் இதெல்லாம் பெரிதாக வெடிக்கும்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications