பெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்?!
Recommended Video
சென்னை: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்தியரான அபிஜித் பானர்ஜிக்கு பின் தமிழரான செந்தில் முல்லைநாதன் என்பவர் இருந்துள்ளார்.
நோபல் பரிசுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டு வருகிறது. சென்ற வருடத்தை விட இந்த வருட மிகவும் பரந்துபட்ட தன்மையுடன் பல நாட்டை சேர்ந்த நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
யாருமே எதிர்பார்க்காத வகையில் நேற்று இந்தியர் ஒருவருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி இந்த நோபல் பரிசை பெற்று இருக்கிறார்.

தனியாக இல்லை
அதிலும் இவர் தனியாக இந்த பரிசை பெறவில்லை. அவரின் காதல் மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மெக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வறுமையை ஒழிப்பது தொடர்பான இவர்கள் செய்த ஆய்வுதான் இந்த பரிசுக்கு காரணம்.

சென்னை தொடர்பு
இந்த பொருளாதார ஆய்வுக்காக மொத்தம் 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அபிஜித் பானர்ஜி அப்பா அம்மா இரண்டு பேருமே பொருளாதாரப் பேராசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் அப்பா சென்னை பிரெசிடென்சி கல்லூரியில்தான் படித்து இருக்கிறார்.

என்ன ஆய்வு
இவரின் இந்த நோபல் பரிசுக்கு பின் தமிழர் ஒருவரின் உழைப்பும் இருக்கிறது. அபிஜித், எஸ்தர் இவர்கள் இருவருடன் சேர்ந்து செந்தில் முல்லைநாதன் என்ற ஆய்வாளர் செய்த ஆராய்ச்சிக்குத்தான் இந்த பரிசு வழங்கி இருக்கிறார்கள். அப்துல் லத்தீப் ஜெமீல் போவார்ட்டி ஆக்ஷன் லேப் (Abdul Latif Jameel Poverty Action Lab) என்ற மையத்தை உருவாக்கி இவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.

உலக வறுமை
உலகம் முழுக்க எப்படி வறுமையை ஒழிப்பது. எளிதான திட்டங்களை எப்படி கொண்டு வருவது. மக்களிடம் பண புழக்கத்தை எப்படி அதிகரிப்பது என்று இவர்கள் மூவரும் நிறைய திட்டங்களை வகுத்து இருக்கிறார்கள். இதில் செந்தில் முல்லைநாதன் முக்கியமான பல திட்டங்களை, ஐடியாக்களை அளித்து இருக்கிறார்.

செந்தில் முல்லைநாதன் யார்
செந்தில் முல்லைநாதன் அமெரிக்காவில் பேராசிரியராக இருக்கிறார். ஹார்வேர்ட், எம்ஐடி பல்கலைகளில் இவர் பல வருடம் பொருளாதார துறையில் பேராசிரியராக இருந்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த இவர் 1980களில் அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்.

என்ன புறக்கணிப்பு
இந்த நிலையில் இவர் நோபல் பரிசின் போது புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. செந்தில் செய்த பணிகளை நோபல் குழு கருத்தில் கொள்ளவில்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications