'அபிராமி லிங்கன்'.. சேக்கிழார் கம்பராமாயணம்'.. எடப்பாடி பழனிசாமியை கலாய்த்த செந்தில் பாலாஜி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 13 அப்பாவி தமிழர்கள் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதை டிவி பார்த்து தெரிந்துக்கொண்ட, கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என கண்டுப்பிடித்த உங்களுக்கு மின் தடை ஏற்படுவது குறிந்தது புரிந்தால் ஆச்சர்யம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அணில் ஏறுவதால் மின்வெட்டு என்பது கேலிக்கூத்தானது என்று அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்தார். அத்துடன் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற சேவை அடிப்படையில் தான் மின்வாரியத்திற்கு கடன் ஏற்பட்டது என்றும் மின்வாரிய இழப்புக்கும் கடனுக்கும் விளக்கம் அளித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்ததுடன், மின் உற்பத்தி, அணிலால் ஏற்பட்ட மின்தடை ஆகியவை குறித்தும் விளக்கினார்.

கம்பராமாயணம்

கம்பராமாயணம்

ட்விட்டரில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளதாவது: "13 அப்பாவி தமிழர்கள் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதை டிவி பார்த்து தெரிந்துக்கொண்ட, கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என கண்டுப்பிடித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இப்பொழுது மின்சாரத்தில் இயங்கும் டிவியை பார்த்து மின்தடை இருப்பதை கண்டறிந்திருக்கிறார்.

என்ன கொண்டுவந்தீர்கள்

என்ன கொண்டுவந்தீர்கள்

முதலில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் மின் உற்பத்திக்காக துவங்கப்பட்ட புதிய மின் திட்டங்கள் எவை? திட்டங்களின் மதிப்பீடு என்ன? அதற்காக செலவு செய்யப்பட தொகை எவ்வளவு? அந்த திட்டங்களின் இன்றைய நிலையென்ன என்பதை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

பராமரிப்பு இல்லை

பராமரிப்பு இல்லை

மேதகு ஆளுநர் உரையில் குறிப்பிட்டது போல் கடந்தகால ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடிகள், தவறுகள், நிதிநெருக்கடிகள் தொடர்பாக மின் துறையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் மின்தடை ஏற்பட்டிருக்கின்றனவென உங்கள் ஆட்சியிலேயே உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தீர்கள்.‌ அது பொய்யா?

அபிராமி லிங்கம்

அபிராமி லிங்கம்

மின் பராமரிப்பு பணிகளுக்காக 19.06.2021 முதல் 28.06.2021 வரை 10 நாட்களாக மின்வாரியம் எடுத்துக் கொண்ட பணிகள் 2,28,000, ஆயினும் முடிக்கப்பட்ட பணிகள் 2,71,000. ஏறத்தாழ 42,000 கூடுதலாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதனை முதலில் அறிந்துக்கொள்ளுங்கள். ஆயினும் அபிராமி லிங்கனுக்கும், ஆபிரகாம் லிங்கனுக்கும் வேறுபாடு தெரியாத உங்களுக்கு இதெல்லாம் புரிந்தாலே ஆச்சரியம்" இவ்வாறு கூறியுள்ளார். முன்னதாக அணில் குறித்து பேசிய கிண்டல் செய்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு இதே பாணியில் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+