பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட தடகளப்பயிற்சியாளர் நாகராஜன் குண்டர் சட்டத்தில் கைது
பயிற்சிக்கு வந்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை: பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தடகளப்பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நாகராஜனுக்கு எதிராக 6 புகார்கள் வந்துள்ளதால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
நாகராஜனுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கடந்த 28ஆம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட நாகராஜன் போக்சோ நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நாகராஜனுக்கு எதிராக 6 புகார்கள் வந்துள்ளதால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ராஜகோபாலனுக்கு எதிராக புகார் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது சில தினங்களுக்கு முன்பு குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் தற்போது தடகளப்பயிற்சியாளர் நாகராஜனும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications