யார் இந்த சிவாஜி கண்ணன்.. திடீரென இவரது வீடியோ லைக்குகளை குவிக்க காரணம் என்ன?
சென்னை: கடந்த இரண்டு நாள்களாக சமூக ஊடகங்களில் வைரலாக மாறி இருக்கிறார் சிவாஜி. ஒரு திருமண நிகழ்ச்சியில் 'ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது' என்ற பாடலுக்கு ஒருவர் அச்சு அசலாக சிவாஜி போன்றே ஆடுகிறார். அந்த வீடியோவைத்தான் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
"நான் பொறந்தது வளர்ந்தது எல்லாமே கடலூரில் ஓல்டு டவுன் தான். எனக்கு இரண்டு மகன்கள். அவர்கள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகிறார்கள். நானும் மனைவி மட்டும் தனியே வாழ்ந்து வருகிறோம்" எனக் கூறும் சிவாஜியின் உண்மையான பெயர் கண்ணப்பன்.

இவர் ஆரம்பக் காலங்களில் நாடக மேடைகளில் தொழில்முறை நடிகராக நடித்து வந்துள்ளார். நாடகங்களில் காலம் மலையேறிவிட்டப் பிறகு கோயில் விழாக்கள், திருமண சுப நிகழ்ச்சிகளில் தோன்றி ஆடல்பாடல் காட்சிகளை அரங்கேற்றி வந்துள்ளார்.
தற்போது 70 வயதைக் கடந்த கண்ணன், தமிழகம் முழுவதும் சிவாஜி கண்ணன் என்றே அறியப்படுகிறார். ஏறக்குறைய 67 ஆண்டுகளாக நாடக மேடைகளில் நடிப்பதையே தொழிலாகச் செய்து வருகிறார்.
"அந்தக் காலத்தில் நாடக உலகில் முன்னோடியான நவாப் ராஜமாணிக்கத்திடம் இருந்தவர், அவரிடமிருந்த பிரிந்து வந்து 'வள்ளுவர் நாடக கலையரங்கம்' நாடக கம்பெனியை ஆரம்பித்தார். அந்த கம்பெனியிலதான் நான் நாடக நடிகராக இருந்தேன்.

அந்தக் காலத்தில் ஒவ்வொரு ஊராகப் போய் மூன்று மாதம் கேம்ப் போட்டு நாடகம் நடத்துவோம். முன்பு எல்லா வேஷங்களைப் போட்டு வந்தேன். ஒரு கட்டத்திற்குப் பிறகு 'தங்கப்பதுமை' படத்தில் வரும் சிவாஜி படப் பாடலுக்கு ஆடினேன்.
அப்புறம் 'சொர்க்கம்' படத்தின் சிவாஜி கெட் அப் போட்டு நடித்தேன். அதிலிருந்து எங்க கம்பெனியில் 'நீ சிவாஜி வேஷம் மட்டுமே போட்டா போதும்'னு சொல்லிவிட்டார்கள். அன்று முதல் சிவாஜி ரோல்லதான் ஆக்ட் பண்ணி வர்றேன்" என்கிறார் இந்த நிழல் சிவாஜி.
இவருக்கு 67 ஆண்டுக்காலமாக நாடகமேடையில் அறிமுகம் இருந்தாலும் புதிய வாழ்க்கையை யூடியூப்தான் ஏற்படுத்தித் தந்துள்ளது. கடந்த 25 நாள்களுக்கு முன்பாக தனக்கென ஒரு யூடியூப் சானலை தொடங்கி இருக்கிறார். அந்த வீடியோதான் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட அந்த காணொளி 5 லட்சத்தை நெருங்கப் போகிறது.

"இத்தனை வருஷமா நான் சிவாஜி வேடத்தில் நடித்து வந்தாலும் உண்மையான சிவாஜியை நான் சந்தித்தது இல்லை. அந்தக் காலத்தில் அவ்வளவு எளிதாக அவரை நெருங்க முடியாது. ஆனால் சமீபத்தில் அவரது மகன் ராம்குமார் என்னைச் சந்தித்து வாழ்த்தினார். பிரபுவும் பாராட்டினார்" என வியக்கும் கண்ணன், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினராக இருந்து வருகிறார்.
தற்போது நாடகக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இல்லை. அந்தக் கலை அழியும் தருவாயில் உள்ளது. ஆகவே சிவாஜி கண்ணன் தமிழகம் முழுவதும் சுப நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்தி ஆடிப்பாடுவதை தொழில் ரீதியாகச் செய்து வருகிறார். அந்த வருமானத்தில் தான் இவரது குடும்பம் இயங்கி வருகிறது.
"எவ்வளவு புகழை மேடைகளில் சம்பாதித்து இருக்கிறேன். ஆனா கடந்த 24 நாள்களுக்கு முன்னால் நான் ஆரம்பித்த யூடியூப் என்னை உலகம் முழுக்க கொண்டுபோய் சேர்த்துவிட்டது. தினமும் யார் யாரோ, எந்தெந்த நாடுகளில் இருந்தோ அழைத்துப் பேசுகிறார்கள். உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கு" எனக் கூறும் சிவாஜி கண்ணன், யூடியூப் மூலம் வருமானம் கூட வரும் என்கிறார்கள். எனக்கு அதைப் பற்றிய விவரம் எல்லாம் தெரியாது என்கிறார்.
ஆரம்ப காலங்களில் கள்ளபார்ட் நடராஜன் வேடங்களில் நடித்த இவர், சிவாஜி வேஷம் போட்ட பிறகுதான் பெரும் புகழைச் சம்பாதித்துள்ளார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications